நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், மதிப்புள்ளவைகளாகவும் இல்லை.
எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5446)حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ، وَالتَّحْمِيدِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5446.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5294.
إسناد ضعيف فيه يزيد بن أبي زياد الهاشمي وهو ضعيف الحديث ، رجاله رجال البخاري عدا يزيد بن أبي زياد الهاشمي روى له البخاري تعليقًا
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஸீத் பின் அபூஸியாத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/1075)
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-5446 , 6154 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-13919 ,
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு பற்றி வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.
பார்க்க : புகாரி-969 .
சமீப விமர்சனங்கள்