பாடம்:
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப ஒன்பது நாள்களில் நோன்பு நோற்பது.
ஹுனைதா பின் காலித் (ரலி) அவர்களின் மனைவி கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், துல்ஹஜ் மாதம் (முதல்) ஒன்பது நாள்களும், ஆஷூரா (நாளான முஹர்ரம் மாதம் 10ஆம்) நாளன்றும், மாதத்தின் முதல் திங்கட் கிழமை, (இரண்டு) வியாழக் கிழமை ஆகிய மூன்று நாள்களும் நோன்பு நோற்றுவந்தார்கள்” என நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களுள் ஒருவர் அறிவித்தார்கள்.
(அபூதாவூத்: 2437)بَابٌ فِي صَوْمِ الْعَشْرِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ، أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَالْخَمِيسَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2437.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
(குறிப்பு: அபூதாவூதின் ரிஸாலா என்ற பிரதியில் والخميسَ، والخَميسَ – இரண்டு வியாழக்கிழமை என்று இடம்பெற்றுள்ளது. அதிகமானோர் இவ்வாறே அறிவித்துள்ளனர்)
- இந்தச் செய்தி அறிவிப்பாளர்தொடரில் குளறுபடியாக இருப்பதால் பலவீனமானது என சில அறிஞர்கள் கூறியுள்ளனர். என்றாலும் இந்தக் கருத்து மற்ற செய்திகளிலும் வந்துள்ளது. துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்களும் சிறப்பிற்குரியவை என்ற அடிப்படையில் பெருநாளைத் தவிர மற்ற நாட்களில் நோன்பு வைக்கலாம் என்று அந்த ஹதீஸிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். (பார்க்க: புகாரி-969)
இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
1 . இந்தக் கருத்தில் நபி (ஸல்) அவர்களின் சில மனைவியர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹுனைதா பின் காலித் —> அவரின் மனைவி —> நபி (ஸல்) அவர்களின் சில மனைவியர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-22334 , 26468 , 27376 , அபூதாவூத்-2437 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-2372 , 2417 , 2418 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-,
- ஹுனைதா பின் காலித் —> அவரின் மனைவி —> நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ஹிந்த் பின்த் அபூஉமைய்யா-ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6898 , அல்முஃஜமுல் கபீர்-,
- ஹுனைதா பின் காலித் —> நபி (ஸல்) அவர்களின் சில மனைவியர் (ரலி)
பார்க்க: குப்ரா நஸாயீ-, நஸாயீ-2415 ,
- ஹுனைதா பின் காலித் —> அவரின் தாயார் —> நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ஹிந்த் பின்த் அபூஉமைய்யா-ரலி)
பார்க்க: அஹ்மத்-, அபூதாவூத்-2452 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, குப்ரா பைஹகீ-,
- ஹாஷிம் பின் காஸிம்…—> ஹுனைதா பின் காலித் —>ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2416 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-6422 , அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
ஆய்வுக்காக: துல்ஹஜ் 9 நாட்கள் நோன்பு .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-969 ,
கூடுதல் தகவல் பார்க்க: துல்ஹஜ் மாதம் முதல் 9 நாட்கள் நோன்பு நோற்பது சரியா? .
சமீப விமர்சனங்கள்