தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-11205

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரண செய்தியை அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11205)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَبِيبِ بْنِ سُلَيْمٍ، عَنْ بِلَالِ بْنِ يَحْيَى، عَنْ حُذَيْفَةَ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّعْيِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11205.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-10980.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹபீப் பின் ஸுலைம் என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே நம்பகமானவர் பட்டியிலில் சேர்த்துள்ளார். எனவே சிலர் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
  • இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் அல்ல. இவர் ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர் என சிலர் கூறியுள்ளனர்.
  • அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இவர் இடம் பெறும் செய்தியை ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்…
  • பிலால் பின் யஹ்யா, ஹுதைஃபா (ரலி) யிடம் செவியேற்கவில்லை என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னு அபீ ஹாத்திம், அபுல்ஹஸன் கத்தான் போன்றோர் கூறியுள்ளனர். பிலால் பின் யஹ்யா ஹுதைஃபா (ரலி) யின் மாணவர் என்ற கருத்தும் உள்ளது. அபூ நுஐம் அவர்கள் பிலால் பின் யஹ்யாவை நபித்தோழர் என்று குறிப்பிட்டுள்ளார். (இக்மாலு தஹ்தீபில் கமால் 3/42)

மேலும் பார்க்க : திர்மிதீ-986 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.