நான் மரணித்து விட்டால் என்னைப் பற்றி அறிவிப்புச் செய்யாதீர்கள்! ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன் என்று ஹுதைஃபா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : பிலால் பின் யஹ்யா
(திர்மிதி: 986)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ القُدُّوسِ بْنُ بَكْرِ بْنِ خُنَيْسٍ قَالَ: حَدَّثَنَا حَبِيبُ بْنُ سُلَيْمٍ العَبْسِيُّ، عَنْ بِلَالِ بْنِ يَحْيَى العَبْسِيِّ، عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ قَالَ:
«إِذَا مِتُّ فَلَا تُؤْذِنُوا بِي، إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ النَّعْيِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-907.
Tirmidhi-Shamila-986.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-905.
إسناد ضعيف فيه عبد القدوس بن بكر الكوفي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் குத்தூஸ் பின் பக்ர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
1 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-986 , இப்னு மாஜா-1476 , குப்ரா பைஹகீ-7179 , அஹ்மத்-23270 , 23455 , இப்னு அபீஷைபா-11205 ,
2 . அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-984 .
3. அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அல்அஷ்அரீ (ரலி) வழியாக வரும் செய்தி:
பார்க்க : அஹ்மத்-23368 ,
4 . அல்கமா பின் கைஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-6046 , 6053 , அபீஷைபா-11210 , 11384 ,
5. இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) வழியாக வரும் செய்தி:
பார்க்க : முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-6056 ,
- அறியாமைக்காலத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவரின் மரணசெய்தியை கத்தி கூச்சலிட்டு அறிவித்து அவருக்காக இரங்கல்பாற்களை பாடுவதும், ஒப்பாரிவைக்கும் பழக்கமும் இருந்தது. (மேற்கண்ட செய்தியை சரியானது என்று வைத்துக்கொண்டாலும்) இந்த அறியாமைக்கால பழக்கத்தை கண்டித்தே இருக்கும் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
- ஒருவர் மரணித்து விட்டால் அவரின் ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கு பெறவேண்டும் என்பதற்காக அது பற்றி மக்களுக்கு அறிவிப்பது தவறில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள். பார்க்க : முஸ்லிம்-1730 ,
- நஜ்ஜாஷி மன்னரின் மரணச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள். புகாரி-1245 ,
சமீப விமர்சனங்கள்