ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவள் தலாக் கூறப்பட்டவளாக ஆகமாட்டாள்.
ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 18329)حَدَّثَنَا إسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ مُعَانِ بْنِ رِفَاعَةَ (1)، عَنْ مَكْحُولٍ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِذَا قَالَ الرَّجُلُ لاِمْرَأَتِهِ : أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ ، فَلَيْسَتْ بِطَالِقٍ ، وَإِذا قَالَ لِعَبْدِهِ : أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ ، فَهُوَ حُرٌّ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-18329.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-14321.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மக்ஹூல் அவர்கள், முஆத் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்று இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அத்தஹ்கீக்-2/296)
- மேலும் இதில் வரும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள், தன் ஊரைச் சேர்ந்தவர்களிடமிருந்து அறிவித்தால் தான் அது சரியான செய்தி. ஆனால் இதில் மதீனாவாசியான முஆத் பின் ரிஃபாஆ விடமிருந்து இவர் அறிவித்துள்ளார் என்பதால் இது மேலும் பலவீனமாகிறது.
- மேலும் இந்தக் கருத்தில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் வழியாக வரும் செய்திகளை இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
கூறியுள்ளார். அதில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள் ஹுமைத் பின் மாலிக் வழியாகத் தான் இந்த செய்தியை அறிவித்துள்ளார். (எனவே இது தவறான அறிவிப்பாளர்தொடர் என்று தெரிகிறது)
(நூல்: அல்இலலுல் முதனாஹியா-2/155)
இந்தக் கருத்தையே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்…
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11331 .
சமீப விமர்சனங்கள்