தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-30107

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 80:31) எனும் வசனத்தின் விளக்கம் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தெரியாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று பதிலளித்தார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 30107)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ،

أَنَّ أَبَا بَكْرٍ سُئِلَ عَنْ {فَاكِهَةً وَأَبًّا} [عبس: 31]، فَقَالَ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-30107.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29518.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ இப்ராஹீம் பின் யஸீத் பின் ஷரீக் அத்தைமீ அவர்கள் பலமானவர் என்றாலும் இவர் பெரும்பாலான நபித்தோழர்களிடம் ஹதீஸ்களைக் கேட்கவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களைவிட வயது குறைந்த பிற்கால நபித்தோழர்களிடம் இவர் ஹதீஸைக் கேட்கவில்லை. இவர் ஹிஜ்ரீ 92 அல்லது 93 இல் இறந்ததாகவும், அப்போது அவருக்கு வயது 40 என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இவர் ஹிஜ்ரீ 92 இல் இறந்தவர் என்று கருதினாலும் இவர் பிறந்தது ஹிஜ்ரீ 52 ஆகும். அபூபக்ர் (ரலி) ஹிஜ்ரீ 13 இல் இறந்துவிட்டார். எனவே இதை இவர், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் இவர் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனமும் உள்ளது.

(நூல்: ஸியரு அஃலாமின் நுபலா-5/61, தக்ரீபுத் தஹ்தீப்-1/118)

எனவே இது முன்கதிஃ என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2082 .

2 comments on Musannaf-Ibn-Abi-Shaybah-30107

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு முஸன்னஃப் அபு ஷைபாவில் ஹதீத் எண் 30126 துஆ இடம் பெறுகிறது. அந்த ஹதீத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பொருள்படும் வகையில் வெளியிடவும். இன்ஷா அல்லாஹ்

    1. வ அலைக்கும் ஸலாம். முஸன்னஃப் அபு ஷைபா பல பிரதிகளில் உள்ளது. ஹதீஸ் எண்கள் மாறுபடும். நீங்கள் கேட்கும் ஹதீஸின் கருத்தைத் தெரிவிக்கவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.