தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1095

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப்பகுதிகளில் ஒன்றான) “குபா”வுக்குச் செல்பவர் அங்கு சென்றடைவார். அப்போதும் சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்.

Book : 5

(முஸ்லிம்: 1095)

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

«كُنَّا نُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءٍ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Tamil-1095
Shamila-621
JawamiulKalim-991




  • “பிறகு எங்களில் (மேட்டுப்பகுதிகளில் ஒன்றான) “குபா”வுக்குச் செல்பவர் அங்கு சென்றடைவார்” என்ற இந்தச் செய்தியில் இடம்பெறும் “குபா”வுக்குச் செல்பவர் என்ற கருத்தை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம் மட்டுமே அறிவித்துள்ளார் என நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு அப்துல்பர், கதீப் பக்தாதீ போன்றோர் கூறியுள்ளதாக இப்னு ரஜப் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-4/284)

  • எனவே குபா என்ற வார்த்தையை விட அல்அவாலீ-மேடானபகுதி என்பதே சரியாகும்.
  • இப்னு அப்துல்பர் அவர்கள், இரண்டின் கருத்தும் ஒன்றே என்று கூறியுள்ளார். மதீனாவிற்கு அருகிலிருக்கும் சில மேடான பகுதிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று மைல் இருக்கும். அதிகபட்சமாக பத்து மைல்களும் இருக்கும். (மதீனாவிலிருந்து குபா என்ற பகுதி சுமார் ஐந்து மைல் இருக்கும்). எனவே ஸுஹ்ரீ அவர்கள் இரண்டு வகையிலும் அறிவித்திருக்கலாம் என்று இப்னு ரஜப் பதிவு செய்துள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-4/284)

மேலும் பார்க்க: புகாரி-550 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.