ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 22
ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் “முஸல்லா” எனும் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று (“அல்லாஹு அக்பர்” என்று) நான்கு “தக்பீர்”கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
Book : 11
(முஸ்லிம்: 1733)22 – بَابٌ فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ
«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، فَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى، وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»
Tamil-1733
Shamila-951
JawamiulKalim-1586
சமீப விமர்சனங்கள்