தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2077

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் காலை உணவு உண்டுகொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள், “அபூமுஹம்மதே, சாப்பிட வாருங்கள்” என்று (என்னிடம்) கூறினார்கள். நான், “இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆஷூரா நாள் எ(த்தகைய)து என்று நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். “அது என்ன நாள்?” என்று கேட்டேன். அவர்கள், “அது ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுவந்த நாளாகும். ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் விதி) கைவிடப்பட்டது” என்று சொன்னார்கள்.

இதை அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அந்த நோன்பை (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த (ஆஷூரா) நோன்பை (அல்லாஹ்வின் தூதர் – ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 13

(முஸ்லிம்: 2077)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ

دَخَلَ الْأَشْعَثُ بْنُ قَيْسٍ عَلَى عَبْدِ اللهِ، وَهُوَ يَتَغَدَّى فَقَالَ: يَا أَبَا مُحَمَّدٍ ادْنُ إِلَى الْغَدَاءِ، فَقَالَ: أَوَلَيْسَ الْيَوْمُ يَوْمَ عَاشُورَاءَ؟ قَالَ: وَهَلْ تَدْرِي مَا يَوْمُ عَاشُورَاءَ؟ قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: «إِنَّمَا هُوَ يَوْمٌ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَبْلَ أَنْ يَنْزِلَ شَهْرُ رَمَضَانَ، فَلَمَّا نَزَلَ شَهْرُ رَمَضَانَ تُرِكَ» وقَالَ أَبُو كُرَيْبٍ تَرَكَهُ

– وحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَا: فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تَرَكَهُ


Tamil-2077
Shamila-1127
JawamiulKalim-1912




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்லிம்-2077, 2078 , 2079 , புகாரி-4503 , அஹ்மத்-4024 , 4349 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.