தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-250

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது (சூரியன்) இறை அரியாசனத்துக்கு (அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அதனிடம், “எழுந்து, நீ வந்த வழியே சென்றுவிடு” என்று கூறப்படும் வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு (மறுநாள் மீண்டும்) இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் சென்று தலைவணங்குகிறது, அதனிடம், “நீ எழுந்து, வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு!” என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது திரும்பிச் சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு மக்களுக்கு (எந்த வித்தியாசமும்) தெரியாத விதத்தில் இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அப்போது அதனிடம், “நீ எழுந்து மேற்கிலிருந்து உதயமாகு!” என்று கூறப்படும். அப்போது அது (வழக்கத்திற்கு மாறாக) மேற்கிலிருந்து உதயமாகும்” என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அது, முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத (இறுதி) நாளாகும்” என்று கூறினார்கள்.(6:158)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

– அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். சூரியன் மறைந்தபோது (என்னிடம்) அவர்கள், “இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உமக்குத் தெரியுமா, அபூதர்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “அது (இறை அரியாசனத்துக்குக் கீழே) சென்று தலைவணங்குவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதனிடம், “நீ வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு” என்று கூறப்படுகிறது போலும். (இறுதியாக ஒரு நாள்) அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அபூதர் (ரலி) அவர்கள் இதை அறிவித்துவிட்டு, (குர்ஆனில் “வஷ்ஷம்சு தஜ்ரீ லி முஸ்தகர்ரின் லஹா” என்று இடம்பெற்றுள்ள 36:38ஆவது வசனத்தை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையில் உள்ளபடி “வ தாலிக முஸ்தகர்ருன் லஹா” என்று ஓதிக்காட்டினார்கள். (பொருள்: அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 1

(முஸ்லிம்: 250)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ التَّيْمِيِّ، – سَمِعَهُ فِيمَا أَعْلَمُ – عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمًا: «أَتَدْرُونَ أَيْنَ تَذْهَبُ هَذِهِ الشَّمْسُ؟» قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: ” إِنَّ هَذِهِ تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ، فَتَخِرُّ سَاجِدَةً، فَلَا تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا: ارْتَفِعِي، ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ، فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا، ثُمَّ تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ، فَتَخِرُّ سَاجِدَةً، وَلَا تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا: ارْتَفِعِي، ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ، فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا، ثُمَّ تَجْرِي لَا يَسْتَنْكِرُ النَّاسَ مِنْهَا شَيْئًا حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا ذَاكَ تَحْتَ الْعَرْشِ، فَيُقَالُ لَهَا: ارْتَفِعِي أَصْبِحِي طَالِعَةً مِنْ مَغْرِبِكِ، فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَغْرِبِهَا “، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتَدْرُونَ مَتَى ذَاكُمْ؟ ذَاكَ حِينَ {لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا} [الأنعام: 158]

-وَحَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، أَخْبَرَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ عَبْدِ اللهِ، عَنْ يُونُسَ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمًا: «أَتَدْرُونَ أَيْنَ تَذْهَبُ هَذِهِ الشَّمْسُ؟» بِمِثْلِ مَعْنَى حَدِيثِ ابْنِ عُلَيَّةَ

-وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، وَاللَّفْظُ لَأَبِي كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، فَلَمَّا غَابَتِ الشَّمْسُ، قَالَ: «يَا أَبَا ذَرٍّ، هَلْ تَدْرِي أَيْنَ تَذْهَبُ هَذِهِ؟» قَالَ: قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” فَإِنَّهَا تَذْهَبُ فَتَسْتَأْذِنُ فِي السُّجُودِ، فَيُؤْذَنُ لَهَا وَكَأَنَّهَا قَدْ قِيلَ لَهَا: ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ، فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا “، قَالَ: ثُمَّ قَرَأَ فِي قِرَاءَةِ عَبْدِ اللهِ: وَذَلِكَ مُسْتَقَرٌّ لَهَا


Tamil-250
Shamila-159
JawamiulKalim-232,
233




மேலும் பார்க்க: புகாரி-3199 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.