அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) “ஜம்ரத்துல் அகபா”வில் கற்களை எறிந்து, தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப்பக்கத்தைக் காட்டி “மழி” என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து “இதை மக்களிடையே விநியோகிப்பீராக!” என்றார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2513)وحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، سَمِعْتُ هِشَامَ بْنَ حَسَّانَ، يُخْبِرُ عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ
«لَمَّا رَمَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَمْرَةَ وَنَحَرَ نُسُكَهُ وَحَلَقَ نَاوَلَ الْحَالِقَ شِقَّهُ الْأَيْمَنَ فَحَلَقَهُ، ثُمَّ دَعَا أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ فَأَعْطَاهُ إِيَّاهُ، ثُمَّ نَاوَلَهُ الشِّقَّ الْأَيْسَرَ»، فَقَالَ: «احْلِقْ فَحَلَقَهُ، فَأَعْطَاهُ أَبَا طَلْحَةَ»، فَقَالَ: «اقْسِمْهُ بَيْنَ النَّاسِ»
Tamil-2513
Shamila-1305
JawamiulKalim-2308
சமீப விமர்சனங்கள்