தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2695

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழுவதன் சிறப்புக் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை;ஆயினும், அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என என்னிடம் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் “ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட” அல்லது “ஆயிரம் தொழுகைகள் தொழுவதைப் போன்று” சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர!

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2695)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ الثَّقَفِيِّ، قَالَ ابْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ: سَأَلْتُ أَبَا صَالِح، هَلْ سَمِعْتَ أَبَا هُرَيْرَةَ يَذْكُرُ فَضْلَ الصَّلَاةِ فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: لَا، وَلَكِنْ أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ؛ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ – أَوْ كَأَلْفِ صَلَاةٍ – فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا أَنْ يَكُونَ الْمَسْجِدَ الْحَرَامَ»

– وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالُوا: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الْإِسْنَادِ


Tamil-2695
Shamila-1394
JawamiulKalim-2480




மேலும் பார்க்க : புகாரி-1190 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.