தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2718

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 2

ஒரு பெண்ணைப் பார்த்த ஒருவருக்குத் தவறான எண்ணம் ஏற்பட்டால், உடனே அவர் தம் மனைவியிடமோ அடிமைப் பெண்ணிடமோ சென்று தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வது நல்லது.

 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். (இது போன்ற சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, “ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் அதில், “நபியவர்கள் உடனே தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார்” என்று காணப்படுகிறது. (“தமக்குரிய” எனும் குறிப்பு இல்லை.) அத்துடன், “அவள் ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 16

(முஸ்லிம்: 2718)

2 – بَابُ نَدْبِ مَنْ رَأَى امْرَأَةً فَوَقَعَتْ فِي نَفْسِهِ، إِلَى أَنْ يَأْتِيَ امْرَأَتَهُ أَوْ جَارِيَتَهُ فَيُوَاقِعَهَا

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً، فَأَتَى امْرَأَتَهُ زَيْنَبَ، وَهِيَ تَمْعَسُ مَنِيئَةً لَهَا، فَقَضَى حَاجَتَهُ، ثُمَّ خَرَجَ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ: «إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ، وَتُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ، فَإِذَا أَبْصَرَ أَحَدُكُمُ امْرَأَةً فَلْيَأْتِ أَهْلَهُ، فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفْسِهِ»

– حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا حَرْبُ بْنُ أَبِي الْعَالِيَةِ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً، فَذَكَرَ بِمِثْلِهِ. غَيْرَ أَنَّهُ قَالَ: فَأَتَى امْرَأَتَهُ زَيْنَبَ وَهِيَ تَمْعَسُ مَنِيئَةً، وَلَمْ يَذْكُرْ: «تُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ»


Muslim-Tamil-2718.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1403.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-2499.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42856-அபுஸ் ஸுபைர் அல்மக்கீ (முஹம்மத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் தத்ருஸ்)
    தத்லீஸ் செய்பவர் என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்ற சிலர் கூறியுள்ளனர். இதனடிப்படையில் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றவர்கள் இவர் தத்லீஸ் செய்யும் செய்திகளை விமர்சித்துள்ளனர். இவர் தத்லீஸ் செய்யாத செய்திகளிலும், அல்லது இவரிடமிருந்து லைஸ் பின் ஸஃத் அறிவிக்கும் செய்திகளிலும் விமர்சனம் இல்லை என்று கூறுகின்றனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் இடம்பெறும் 2 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். ஒன்றில் இவரை அதாஉ அவர்களுடன் இணைத்து கூறியுள்ளார். மற்றொன்று இவர் தத்லீஸ் செய்யாத செய்தி.

(பார்க்க: புகாரி-21894362)

  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் இவர் இடம்பெறும் 274 செய்திகளை பதிவு செய்துள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-235)


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17203 , அஹ்மத்-14537 , 14672 , 14744 , 15249 , அப்துபின்ஹுமைத்-1061 , முஸ்லிம்-27182719 ,  அபூதாவூத்-2151 , திர்மிதீ-1158 , குப்ரா நஸாயீ-9072 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,


இந்தச் செய்தியை அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து ஆறு பேர் அறிவித்துள்ளனர்…

  • ஹர்பு பின் அபுல்ஆலியா —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-,

  • ஹிஷாம் அத்தஸ்துவாயீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 154
    —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: முஸ்லிம்-, அபூதாவூத்-, திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,

மஃகில் பின் உபைதுல்லாஹ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: முஸ்லிம்-2719 ,

இப்னு ஜுரைஜ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: இப்னு ஹிப்பான்-5573 ,

மூஸா பின் உக்பா —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-15248 ,

இப்னு லஹீஆ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-14672 , 14744 ,


2 . அபூகப்ஷா-ஸஃத் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-18027 .

4 comments on Muslim-2718

  1. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘அபீ ஸுபைர்’ என்பவர், தனக்கு அறிவித்த அறிவிப்பாளரை இருட்டடிப்புச் செய்பவர் (முதல்லிஸ்) என்று ஹதீஸ் கலை அறிஞர்களால் வைக்கப்படும் விமர்சனம் சரியா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      அபுஸ் ஸுபைர் தத்லீஸ் செய்துள்ளார் என்று நஸாயீ போன்ற சிலர் கூறியுள்ளனர். இதனடிப்படையில் அல்பானீ போன்றவர்கள் இவர் தத்லீஸ் செய்யும் செய்திகளை விமர்சித்துள்ளனர். இவர் தத்லீஸ் செய்யாத செய்திகளிலும், அல்லது இவரிடமிருந்து லைஸ் பின் ஸஃத் அறிவிக்கும் செய்திகளிலும் விமர்சனம் இல்லை என்று கூறுகின்றனர்.

      புகாரீ அவர்கள் இவர் இடம்பெறும் 2 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். ஒன்றில் இவரை அதாஉ அவர்களுடன் இணைத்து கூறியுள்ளார். மற்றொன்று இவர் தத்லீஸ் செய்யாத செய்தி. (புகாரீ-2189, 4362)
      முஸ்லிம் இமாம் 274 செய்திகளை பதிவு செய்துள்ளார்.

      முஸ்லிம் இமாம், இவர் ஜாபிர் அவர்களிடமிருந்து அன்அனாவாக அறிவித்துள்ள செய்திகளை பதிவு செய்துள்ளதால் இவரின் செய்திகள் சரியானவையே என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

      இந்த விசயத்தில் இரு கருத்து உடையவர்களும் சில ஆதாரங்களை கூறியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றிய நமது முடிவை பிறகு பதிவு செய்கிறோம்.

      1. வ அலைக்குமுஸ்ஸலாம். அல்ஹம்துலில்லாஹ் பொறுமையாகவும் தாமதிக்காமலும் பதிலளித்துள்ளீர்கள். ஜஸாக்கல்லாஹ் ஹைரன். இன்ஷா அல்லாஹ் உங்களின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு அதிகமான நற்கூலிகளைத் தருவானாக! உங்கள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நீடித்து வைப்பானாக!

        1. அல்ஹம்துலில்லாஹ்!

          அல்லாஹ் உங்களுக்கும் அதிகமான நற்கூலிகளைத் தருவானாக! உங்கள் ஆயுளிலும், ஆரோக்கியத்திலும் பரக்கத் செய்வானாக!

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.