தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2832

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 21

மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவன் ஆவான்.

இதை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 16

(முஸ்லிம்: 2832)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ، الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ، وَتُفْضِي إِلَيْهِ، ثُمَّ يَنْشُرُ سِرَّهَا»


Muslim-Tamil-2832.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1437.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-2605.




3 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உமர் பின் ஹம்ஸா —> அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்லிம்-28322833 , அபூதாவூத்-, குப்ரா பைஹகீ-,


  • ஸயீத் பின் யஸீத் —> அபூநள்ரா —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: கஷ்ஃபுல் அஸ்தார்-1450.

كشف الأستار عن زوائد البزار على الكتب الستة (2/ 170)
باب كتمان ما يكون بين الزوجين
1450- حَدَّثَنَا رَوْحُ بْنُ حَاتِمٍ أَبُو غَسَّانَ ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ عِيسَى ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ أَبُو مَسْلَمَةَ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : أَلَا عَسَى أَحَدُكُمْ أَنْ يَخْلُوَ بِأَهْلِهِ يُغْلِقُ بَابًا ، ثُمَّ يُرْخِي سِتْرًا ، ثُمَّ يَقْضِي حَاجَتَهُ ، ثُمَّ إِذَا خَرَجَ حَدَّثَ أَصْحَابَهُ بِذَلِكَ ، أَلَا عَسَى إِحْدَاكُنَّ أَنْ تُغْلِقَ بَابَهَا ، وَتُرْخِي سِتْرَهَا ، فَإِذَا قَضَيْتَ حَاجَتَهَا ، حَدَّثَتْ صَوَاحِبَهَا ، فَقَالَتِ امْرَأَةٌ سَفْعَاءُ الْخَدَّيْنِ : وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ ، إِنَّهُنَّ لَيَفْعَلْنَ ، وَإِنَّهُمْ لَيَفْعَلُونَ ، قَالَ : فَلا تَفْعَلُوا ، فَإِنَّهُ مِثْلُ ذَلِكَ مِثْلُ الشَّيْطَانِ لَقِيَ شَيْطَانَةً عَلَى قَارِعَةِ الطَّرِيقِ فَقَضَى حَاجَتَهُ مِنْهَا ، ثُمَّ انْصَرَفَ وَتَرَكَهَا.
قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُهُ عَنْ أَبِي سَعِيدٍ إِلا بِهَذَا الإِسْنَادِ ، وَأَبُو مَسْلَمَةَ ثِقَةٌ ، وَمَهْدِيٌّ وَاسِطِيٌّ لا بَأْسَ بِهِ.


மேலும் பார்க்க: அஹ்மத்-27583 .

1 comment on Muslim-2832

  1. ஸஹீஹ் முஸ்லிம் நூலில் பலவீனமான செய்திகள்.!

    ஸஹீஹ் முஸ்லிம் – 2832 & 2833.

    َالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ، ثُمَّ يَنْشُرُ سِرَّهَا “.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவன் ஆவான்.
    அறிவித்தவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி). நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2832.

    قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّ مِنْ أَعْظَمِ الْأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ، ثُمَّ يَنْشُرُ سِرَّهَا “.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும்.
    அறிவித்தவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி).
    நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2833.

    இந்த இரண்டு செய்தி’யிலும் – உமர் பின் ஹம்ஸா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை பலவீனமான நபர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

    *عمر بن همزة*

    يحى بن معين :-
    قال الدوري عنه : عمر بن حمزة أضعف من عمر بن محمد بن زيد .
    وقال الدارمي : قلت : ما حال عمر بن حمزة الذي يروي عن سالم ؟ فقال : ضعيف .
    وقال ابن الجنيد : قلت : هو مستقيم الحديث ؟ قال : صالح ، ليس بذاك .

    உமர் பின் ஹம்ஸா -பலவீனமான நபர் என்று இமாம் யஹ்யா பின் முயீன் அவர்கள் கூறினார்கள் என இமாம் அத்தவ்ரீ இமாம் தாரிமீ இமாம் இப்னுல் ஜுனைத் அவர்களும்,

    أبو زرعة الرازي : قال البرذعي عنه : ليس بذا خير .

    உமர் பின் ஹம்ஸா அவர்களிடம் அப்படி (எந்த ஒரு ) சிறப்பும் இல்லை என்று கூறி இவரை பலவீனமான நபர் என்று இமாம் அபூ ஹாத்தம் அர்ராஸீ அவர்கள் கூறினார்கள் என இமாம் பர்தயீ அவர்களும்,
    أحمد بن حنبل : قال عبد الله : سمعته يقول : عمر بن حمزة أحاديثه أحاديث مناكير

    உமர் பின் ஹம்ஸா அறிவிக்கும் செய்திகள் மறுக்கப்பட வேண்டும் என்று தனது தந்தை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹம்பல் அவர்களும்,
    النسائي : ضعيف.
    قال في (الضعفاء) : ليس بالقوي .
    உமர் பின் ஹம்ஸா – உறுதியான (மனனத் திறனுடைய) நபர் இல்லை & பலவீனமான நபர் என்று இமாம் நஸாஈ அவர்களும்,
    ابن حبان : ذكره في طبقة أتباع التابعين من كتابه (الثقات) ، وقال : كان ممن يخطئ ..
    ஹதீஸ்களை அறிவிப்பதில் தவறிழைக்கும் நபர்களில் இவரும் ஒருவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும்,
    الذهبي : قال في (الكاشف) : ضعفه ابن معين ، والنسائي ، وقال أحمد : أحاديثه مناكير .
    இமாம் யஹ்யா பின் முயீன் இமாம் நஸாஈ இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோரின் கூற்றின்படி – உமர் பின் ஹம்ஸா பலவீனமான நபர் என்று இமாம் தஹபீ அவர்களும்,
    ابن حجر العسقلاني :
    قال في (تقريب التهذيب) : ضعيف .
    உமர் பின் ஹம்ஸா பலவீனமான நபர் என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்களும் கூறியுள்ளார்கள்.

    நாஸிருத்தீன் அல்பானீ அவர்கள் – அஸ்ஸில்ஸிலத்துல் ழயீஃபா – 5825. ழயீஃபுத் தர்ஃகீப் – 1240. ழயீஃபுல் ஜாமிவு – 1988. ஹிதாயத்துர் ருவாத் – 3126. ஃகாயத்துல் மராம் – 237. ழயீஃபு அபூதாவூத் – 4870. ஆதாபுஸ் ஸஃபாஃப் – 70’ல் ஆகிய நூல்களில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். இந்த செய்தியை – பலவீனமான செய்தி என்றே நாஸிருத்தீன் அல்பானீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

    இமாம் தஹபீ அவர்கள் – மீஸானுல் இஃதிதால் – 3/192’ல் உமர் பின் ஹம்ஸா இடம் பெற்றுள்ளார் என்பதால் இது மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று கூறியுள்ளார்கள்.

    இமாம் இப்னுல் கத்தான் – அல்வஹ்மு வல் ஈஹாம் – 4/450’ல் ஹஸனான செய்தி என்று கூறினாலும் – அதே அல்வஹ்மு வல் ஈஹாம் – 5/506’ல் உமர் பின் ஹம்ஸா இடம் பெற்றுள்ளார் என்பதால் இந்த செய்தி பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    * குறிப்பு :- இந்த செய்தி பலவீனமானதாக இருந்தாலும் – கணவன் மனைவியின் தாம்பத்திய இரகசியத்தை வெளிப்படுத்துவது நல்ல பண்பு அல்ல. அது தீய பண்பு. ஒரு முஸ்லிமிடம் பேச்சு செயல் அனைத்திலும் நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. ஆகவே அந்த அடிப்படையில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள புனிதமான தாம்பத்திய இரகசியத்தை வெளிப்படுத்துவது கூடாது.

    * கீழ் காணும் செய்திகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். 👇.

    தேவையற்ற – ஆபாச கெட்டப் பேச்சுக்கள் வேண்டாம்.

    وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا‏.
    (முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

    நபி (ஸல்) அவர்களின் பண்பு.

    عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
    لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَكَانَ يَقُولُ: «إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا

    நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ”உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!” என்று அவர்கள் கூறினார்கள்.
    அறிவித்தவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­)
    நூல்: ஸஹீஹுல் புகாரீ -3559.

    நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : –
    . فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ»
    உனது நாவை நல்லவற்றி­ருந்தே தவிர (மற்றவற்றி­ருந்து) பாதுகாத்துக் கொள்”.
    அறிவித்தவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி­)
    நூல் : முஸ்னத் அஹ்மத்-18647 (17902).

    நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :-
    وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»
    அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
    அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­).
    நூல் : ஸஹீஹுல் புகாரீ – 6018.

    * மேற்கண்ட செய்திகள் – நல்லவற்றை பேச வேண்டும் – ஆபாசமாக பேசக் கூடாது என்று நமக்கு வழிகாட்டுகிறது. கணவன் மனைவிக்கு இடையே உள்ள தாம்பத்திய இரகசியத்தை பேசுவது ஆபாச பேச்சாகும்.

    இந்த குற்றத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.