தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3889

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மஸ்லமா பின் முகல்லத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அங்கு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு அருகில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “படைப்பினங்களிலேயே மிகவும் தீயவர்கள் மீதே யுகமுடிவு நாள் சம்பவிக்கும். அவர்கள் அறியாமைக் கால மக்களைவிட தீயவர்களாக இருப்பர். அவர்கள் அல்லாஹ்விடம் எதை வேண்டினாலும் இறைவன் அதை நிராகரித்துவிடுவான்” என்று சொன்னார்கள்.

இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது மஸ்லமா (ரலி) அவர்கள், “உக்பா (ரலி) அவர்களே! அப்துல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்கள். அதற்கு உக்பா (ரலி) அவர்கள், “அவரே நன்கறிந்தவர். நானோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டுள்ளேன் என்றார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப போராடியவண்ணம் தம் எதிரிகளை அடக்கிவைத்தபடியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. அவர்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக்கும் நிலையிலேயே யுகமுடிவு நாள் ஏற்படும்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “ஆம் (நீங்கள் சொன்னதும் சரியே!) பிறகு கஸ்தூரி போன்ற மணமுடைய ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். அது பட்டு போல மேனியை வருடும். பிறகு எந்த உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அத்தகைய எந்த உயிரையும் அது கைப்பற்றாமல் விடாது. பிறகு மக்களிலேயே மிகவும் தீயவர்களே எஞ்சியிருப்பர். அவர்கள்மீதே யுக முடிவு நாள் ஏற்படும்” என்று கூறினார்கள்.

Book : 33

(முஸ்லிம்: 3889)

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ، حَدَّثَنَا عَمِّي عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ شِمَاسَةَ الْمَهْرِيُّ، قَالَ

كُنْتُ عِنْدَ مَسْلَمَةَ بْنِ مُخَلَّدٍ، وَعِنْدَهُ عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ، فَقَالَ عَبْدُ اللهِ: لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ الْخَلْقِ، هُمْ شَرٌّ مِنْ أَهْلِ الْجَاهِلِيَّةِ، لَا يَدْعُونَ اللهَ بِشَيْءٍ إِلَّا رَدَّهُ عَلَيْهِمْ، فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ أَقْبَلَ عُقْبَةُ بْنُ عَامِرٍ، فَقَالَ لَهُ مَسْلَمَةُ: يَا عُقْبَةُ، اسْمَعْ مَا يَقُولُ عَبْدُ اللهِ، فَقَالَ عُقْبَةُ: هُوَ أَعْلَمُ، وَأَمَّا أَنَا فَسَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تَزَالُ عِصَابَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى أَمْرِ اللهِ، قَاهِرِينَ لِعَدُوِّهِمْ، لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى تَأْتِيَهُمُ السَّاعَةُ وَهُمْ عَلَى ذَلِكَ»، فَقَالَ عَبْدُ اللهِ: أَجَلْ، «ثُمَّ يَبْعَثُ اللهُ رِيحًا كَرِيحِ الْمِسْكِ مَسُّهَا مَسُّ الْحَرِيرِ، فَلَا تَتْرُكُ نَفْسًا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنَ الْإِيمَانِ إِلَّا قَبَضَتْهُ، ثُمَّ يَبْقَى شِرَارُ النَّاسِ عَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ»


Muslim-Tamil-3889.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1924.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3557.




  • சில ஹதீஸ்களில் மறுமைநாள் வரை ஒரு கூட்டம் மார்க்கத்தை சரியாக கடைபிடித்து சத்தியத்தில் இருப்பார்கள் என்று மட்டும் வந்துள்ளது.
  • வேறு சில ஹதீஸ்களில் மறுமைநாள்-உலக அழிவு ஏற்படுவது தீயவர்கள் மீதே நிகழும் என்று வந்துள்ளது.

இந்த இரண்டுவகையான ஹதீஸ்களுக்கு பலரும் பலவகையான விளக்கங்களை கூறியிருந்தாலும் மேற்கண்ட இந்த ஹதீஸ் அதற்கு விளக்கமாக அமைந்துள்ளது.

1 . இதில் மறுமைநாள் வரை ஒரு கூட்டம் சத்தியத்தில் இருப்பார்கள்; அவர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. உலக அழிவுக்கு முன்பாக அல்லாஹ் ஒரு காற்றை அனுப்புவான். அதனால் சத்தியத்தில் இருந்த அந்த நல்லோர் இறந்துவிடுவர்.

2 . பிறகு தீயவர்கள் மட்டுமே இருப்பார்கள். அப்போது தான் உலக அழிவு ஏற்படும்.

(இந்தக் கருத்தே சரியானது என காழீ இயாள், குர்துபீ, இப்னுஹஜர் போன்ற பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்கள்  கூறுகின்றனர்)


6 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3889 , …


மேலும் பார்க்க: புகாரி-71 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.