ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேற்குவாசிகள் (சிரியாவாசிகள்) யுகமுடிவு நாள்வரை உண்மைக்கு ஆதரவாகவே இருந்துகொண்டிருப்பார்கள்.
அத்தியாயம்: 33
(முஸ்லிம்: 3890)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا يَزَالُ أَهْلُ الْغَرْبِ ظَاهِرِينَ عَلَى الْحَقِّ، حَتَّى تَقُومَ السَّاعَةُ»
Muslim-Tamil-3890.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1925.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3558.
- இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து வரும் செய்திகளில் மேற்கண்ட கருத்தில் வந்துள்ளவையே சரியானதாகும்.
- சில அறிவிப்பாளர்தொடர்களில் அஹ்லுல் ஃகர்ப்-மேற்குவாசிகள் என்பதற்கு பதிலாக அஹ்லுல் அரப்-அரபுகள் என்று வந்துள்ளது. அஹ்லுல் ஃகர்ப் என்பதே அஹ்லுல் அரப் என்ற தவறுதலாக வந்துள்ளது.
5 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- தாவூத் பின் அபூஹிந்த் —> அபூஉஸ்மான் —> ஸஃத் (ரலி)
பார்க்க: முஸ்லிம்-3890 , முஸ்னத் பஸ்ஸார்-1222 , முஸ்னத் அபீ யஃலா-783 ,
- இஸ்மாயீல் பின் அபூகாலித் —> கைஸ் பின் அபூஹாஸிம் —> ஸஃத் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1216 ,
…
மேலும் பார்க்க: புகாரி-71 .
சமீப விமர்சனங்கள்