தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4116

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள், “அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?” என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அது அதைவிட மோசமானது; அருவருப்பானது” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கதாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 36

(முஸ்லிம்: 4116)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أَنَّهُ نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا»، قَالَ قَتَادَةُ: فَقُلْنَا فَالْأَكْلُ، فَقَالَ: «ذَاكَ أَشَرُّ أَوْ أَخْبَثُ»

– وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، وَلَمْ يَذْكُرْ قَوْلَ قَتَادَةَ


Muslim-Tamil-4116.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2024.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3779.




மேலும் பார்க்க: முஸ்லிம்-4115 .

2 comments on Muslim-4116

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    எனக்கு ஒரு சந்தேகம்

    நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாமா சமீபத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் பேசிய ஒரு வீடியோ கேட்டேன் அதில் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது என்ற ஹதீஸ் லைஃப் ஆன ஹதீஸ் என சொல்லி இருந்தாங் இந்த ஹதீஸ் முழு விளக்கம் எனக்கு வேண்டும் ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீர் குடித்தல் வாந்தி எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது அதற்கான விளக்கமும் வேணும்

    இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை
    நூருல் ஹுதா

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.