தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4115

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

நின்றுகொண்டு நீர் அருந்துவது வெறுக்கத்தக்கதாகும்.

 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.

அத்தியாயம்: 36

(முஸ்லிம்: 4115)

14 – بَابُ كَرَاهِيَةِ الشُّرْبِ قَائِمًا

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا»


Muslim-Tamil-4115.
Muslim-TamilMisc-3771.
Muslim-Shamila-2024.
Muslim-Alamiah-3771.
Muslim-JawamiulKalim-3778.




1 . சில செய்திகளில் தண்ணீரை நின்றுக் கொண்டு அருந்துவது தடை என்று வந்துள்ளது.

(பார்க்க: முஸ்லிம்-4115 , 4116)

2 . வேறு சில செய்திகளில் நபி (ஸல்) அவர்கள் நின்றுக் கொண்டு தண்ணீரை அருந்தியுள்ளார்கள் என்றும் வந்துள்ளது.

(பார்க்க: புகாரி-5615 , 5616)

3 . வேறு சில செய்திகளில் நின்றுக் கொண்டு அருந்தினால் வாந்தி எடுத்துவிட வேண்டும் என்றும் வந்துள்ளது.

(பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2100)


  • நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள் என்று வரும் செய்திகளை பொருத்தவரை ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு அதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஹதீஸ்கள் காணப்பட்டால் தடையையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த அடிப்படையில் நின்று கொண்டு அருந்துவது கூடாது.
  • எனினும் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு நீர் அருந்தினார்கள் என்று பல ஹதீஸ்கள் இருப்பதால், தவிர்க்க முடியாத சமயத்தில் நின்று கொண்டு அருந்தினால் தவறில்லை என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்தினார்கள் என்ற செய்தி புகாரியில்-5617 இடம் பெற்றுள்ளது. இதை வைத்து ஸம்ஸம் நீரை மட்டும் நின்று கொண்டு அருந்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
  • ஏனெனில் அலீ (ரலி) அவர்களின் ஹதீஸில் பொதுவாக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே பொதுவாக நீர் அருந்துவதற்கு என்ன சட்டமோ அது தான் ஸம்ஸம் நீருக்கும் உரிய சட்டமாகும்.
  • முஸ்லிம்-4119 இல் வரும் செய்தியில் மறந்து நின்று நீரை அருந்திவிட்டால் வாந்தி எடுக்க வேண்டும் என்று வந்துள்ளது. ஆனால் அதில் உமர் பின் ஹம்ஸா இடம்பெறுவதால் அதில் விமர்சனம் உள்ளது.
  • என்றாலும் இந்தக் கருத்துடன் தொடர்புடைய வேறு சில செய்திகளும் உள்ளன என்பதால் வாந்தி எடுக்கவேண்டும் என்ற கட்டளை கடுமையாக எச்சரிக்கை செய்வதற்கு கூறப்பட்டுள்ளது என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

நாஸிக்-மன்ஸூக் சட்டம்.

1 . அஸ்ரம், இப்னு ஷாஹீன் பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
ஆகியோர் தடை சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு அனுமதியளிக்கப்பட்டது. இது நபி (ஸல்) அவர்களின் செயல்மூலமும், முக்கிய நபித்தோழர்கள், தாபிஈன்களின் செயல்மூலமும் தெரிகிறது என்றுக் கூறி முதல் வகை ஹதீஸ்களை மன்ஸூக்-மாற்றப்பட்டவை என்று கூறியுள்ளனர்.

2 . இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள், இதற்கு மாற்றமாக நின்று அருந்துவது சம்பந்தமாக வரும் செய்திகள் மன்ஸூக் என்றும், நின்று அருந்துவது தடை என்ற கருத்தில் வரும் செய்திகளை நாஸிக் என்றும் கூறியுள்ளார்.

3 . கத்தாபீ,பிறப்பு ஹிஜ்ரி 319
இறப்பு ஹிஜ்ரி 388
வயது: 69
இப்னு பத்தால் போன்றோர் இரண்டுவகையான செய்திகளை இணைத்து விளக்கம் கூறியுள்ளனர்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் மூன்றாவது கருத்தையே சரியானது என்று கூறியுள்ளார். (இதையே நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம்).

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-10/84)


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கதாதா (ரஹ்) —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, முஸ்லிம்-4115 , இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,


2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

3 . ஜாரூத் பின் முஅல்லா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2100 .


5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னதுர் ரபீஃ பின் ஹபீப்-381.

مسند الربيع بن حبيب 103 (ص: 151)
381- أبو عُبيدة ، عن جابر بن زَيد ، عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن الشرب قائما
ويروى أنه شرب من زمزم قائما
قال ابن عباس المرجع فيه إلى كتاب الله وهو قوله {كلوا واشربوا} فهذه الآية تبيح الأكل والشرب على أي حال إلا في موضع خصه النهي من النبي صلى الله عليه وسلم

முஸ்னதுர் ரபீஉ பின் ஹபீப் என்ற இந்த நூலை இபாளிய்யா என்ற பிரிவினர் குர்ஆனுக்கு அடுத்ததாக கருதுகிறார்கள். என்றாலும் இந்த நூலை அறிவிக்கும் ரபீஉ பின் ஹபீப் என்பவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்பதால், இந்த நூலை பெரும்பாலும் நாம் குறிப்பிட மாட்டோம். தகவலுக்காக இந்த ஒரு இடத்தில் மட்டும் பதிவு செய்கிறோம்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.