ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் (எட்டுப் பேருக்குப்) போதுமானதாகும்” என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றே இடம்பெற்றுள்ளது. “நான் கேட்டேன்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
(முஸ்லிம்: 4182)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، ح وحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ»
وَفِي رِوَايَةِ إِسْحَاقَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَمْ يَذْكُرْ سَمِعْتُ
– حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ
Muslim-Tamil-4182.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2059.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3843.
2 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அஃமஷ் —> அபூஸுஃப்யான் (தல்ஹா பின் நாஃபிஃ) —> ஜாபிர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-24551 , அஹ்மத்-14223 , 14389 , முஸ்லிம்-4183 , 4184 , திர்மிதீ-1820 , முஸ்னத் அபீ யஃலா-1902 , 2289 ,
- அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-14222 , 15104 , தாரிமீ-2087 , முஸ்லிம்-4182 , இப்னு மாஜா-3254 , குப்ரா நஸாயீ-6743 , இப்னு ஹிப்பான்-5237 ,
மேலும் பார்க்க: புகாரி-5392 .
சமீப விமர்சனங்கள்