ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர் “முஹம்மத்” எனப் பெயர் சூட்டினார். அப்போது நாங்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதற்கு அனுமதிபெறாத வரை உம்மை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயரால் (“அபூமுஹம்மத்” என) அழைக்கமாட்டோம்” என்று சொன்னோம்.
அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைச் சூட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதிபெறாத வரை என் சமுதாயத்தார் அக்குறிப்புப் பெயரால் என்னை அழைக்கமாட்டோம் என மறுத்துவிட்டனர்” என்று சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்.ஏனெனில், உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.-அதில் “உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப் பட்டுள்ளேன்” எனும் குறிப்பு இல்லை.
Book : 38
(முஸ்லிம்: 4322)حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْثَرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ
وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلَامٌ، فَسَمَّاهُ مُحَمَّدًا فَقُلْنَا: لَا نَكْنِكَ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى تَسْتَأْمِرَهُ، قَالَ فَأَتَاهُ، فَقَالَ: إِنَّهُ وُلِدَ لِي غُلَامٌ فَسَمَّيْتُهُ بِرَسُولِ اللهِ وَإِنَّ قَوْمِي أَبَوْا أَنْ يَكْنُونِي بِهِ حَتَّى تَسْتَأْذِنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «سَمُّوا بِاسْمِي، وَلَا تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنَّمَا بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ»
– حَدَّثَنَا رِفَاعَةُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي الطَّحَّانَ، عَنْ حُصَيْنٍ، بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ «فَإِنَّمَا بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ»
Tamil-4322
Shamila-2133
JawamiulKalim-3984
சமீப விமர்சனங்கள்