தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4570

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மகா பொய்யன் முசைலிமா (யமாமாவிலிருந்து) மதீனாவுக்கு வந்தான். அவன், “முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளி(ப்பதாக வாக்குறுதியளி)த்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்” என்று கூறலானான். அவன் தன் சமுதாயமக்கள் பலருடன் மதீனா வந்திருந்தான்.

நபி (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் இருக்க,அவனை நோக்கி வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களது கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முசைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (வந்து) நின்றுகொண்டு, இந்த(ப் பேரீச்ச மட்டை)த் துண்டை நீ கேட்டால்கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் முடிவு செய்திருப்பதை மீறிச் செல்ல என்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால், அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன். இதோ, இவர்தான் ஸாபித். இவர் என் சார்பாக உனக்குப் பதிலளிப்பார்” என்று சொல்லிவிட்டு,அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.

– இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன்” என்று (முசைலமாவிடம்) சொன்னதைப் பற்றி நான் கேட்டபோது, அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. அதே கனவில் அவ்விரண்டையும் ஊதிவிடும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதிவிட்டேன். உடனே அவ்விரண்டு (காப்புகளு)ம் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் “எனக்குப்பின் வெளிப் படவிருக்கின்ற மகாபொய்யர்கள் இருவர்” என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் “ஸன்ஆ”வாசியான அன்ஸீ;மற்றொருவன் “யமாமா”வாசியான முசைலிமா” என்று சொன்னார்கள்.

Book : 42

(முஸ்லிம்: 4570)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

قَدِمَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَجَعَلَ يَقُولُ: إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ الْأَمْرَ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ، فَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ، فَأَقْبَلَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَفِي يَدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِطْعَةُ جَرِيدَةٍ، حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ، قَالَ: «لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا، وَلَنْ أَتَعَدَّى أَمْرَ اللهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللهُ، وَإِنِّي لَأُرَاكَ الَّذِي أُرِيتُ فِيكَ مَا أُرِيتُ، وَهَذَا ثَابِتٌ يُجِيبُكَ عَنِّي» ثُمَّ انْصَرَفَ عَنْهُ.

– فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَسَأَلْتُ عَنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّكَ أَرَى الَّذِي أُرِيتُ فِيكَ مَا أُرِيتُ» فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَيَّ فِي الْمَنَامِ أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ مِنْ بَعْدِي، فَكَانَ أَحَدُهُمَا الْعَنْسِيَّ صَاحِبَ صَنْعَاءَ، وَالْآخَرُ مُسَيْلِمَةَ صَاحِبَ الْيَمَامَةِ»


Tamil-4570
Shamila-2273,
2274
JawamiulKalim-4225




மேலும் பார்க்க: புகாரி-3620 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.