தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4728

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுகின்ற மனிதராக இருந்தார்கள். ஆகவே, நிர்வாணமாக அவர்கள் காணப்படவேமாட்டார்கள். எனவே, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் “மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது” என்று கூறிக்கொண்டனர்.

இந்நிலையில் மூசா (அலை) அவர்கள் ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை ஒரு கல்மீது வைத்தார்கள். அந்தக் கல் (ஆடையோடு) விரைந்தோடலாயிற்று. மூசா (அலை) அவர்கள் தமது தடியால் அதை அடித்துக்கொண்டு, “கல்லே! எனது ஆடை!” “கல்லே! எனது ஆடை!” என்று கூறிக்கொண்டே அதை விரட்டிக்கொண்டு ஓடினார்கள்.

இறுதியில் அந்தக் கல் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் பிரமுகர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று நின்றது. (இது குறித்தே) “நம்பிக்கை கொண்டோரே! மூசாவுக்குத் தொல்லை தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” (33:69) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

Book : 43

(முஸ்லிம்: 4728)

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ، قَالَ: أَنْبَأَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ

كَانَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ رَجُلًا حَيِيًّا، قَالَ فَكَانَ لَا يُرَى مُتَجَرِّدًا، قَالَ فَقَالَ: بَنُو إِسْرَائِيلَ: إِنَّهُ آدَرُ، قَالَ: فَاغْتَسَلَ عِنْدَ مُوَيْهٍ، فَوَضَعَ ثَوْبهُ عَلَى حَجَرٍ، فَانْطَلَقَ الْحَجَرُ يَسْعَى، وَاتَّبَعَهُ بِعَصَاهُ يَضْرِبُهُ: ثَوْبِي، حَجَرُ ‍ ثَوْبِي، حَجَرُ حَتَّى وَقَفَ عَلَى مَلَأٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ وَنَزَلَتْ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللهِ وَجِيهًا} [الأحزاب: 69]


Tamil-4728
Shamila-339
JawamiulKalim-4380




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.