தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-10730

---


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பணக்காரர்களுக்கு பாதி நாளுக்கு முன்பாக எனது சமுதாயத்தின் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது”(அல்குர்ஆன்: 22:47) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 10730)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْجُرَيْرِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ شُتَيْرِ بْنِ نَهَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«يَدْخُلُ فُقَرَاءُ أُمَّتِي الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ» قَالَ: وَتَلَا: {وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ} [الحج: 47]


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10730.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10503.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19040-ஷுதைர் பின் நஹார் பஸரீ, அப்தீ என்பவரின் பெயர் இருவகையாக கூறப்பட்டுள்ளது.

1 . ஷுதைர் பின் நஹார்.

2 . ஸுமைர் பின் நஹார்.


இவரைப் பற்றிய குறிப்புகளை பதிவு செய்தவர்கள்:

புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்.

التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (4/ 201)
2490- سُمَير بْن نَهار.
عَنْ أَبي هُرَيرةَ. قاله أَبو دَاوُد (1) ، عَنْ صدقة بْن مُوسى، عَنْ مُحَمد بْن واسع.
وَقَالَ لِي مُحَمد بْن بشار: سَمِعتُ عَبد الرَّحمَن بْن مَهدي يَقُولُ: لَيْسَ أحد يَقُولُ: شُتَير بْن نَهار إلا حَماد بْن سَلَمة. قَالَ أَبو نَضرة: وَكَانَ من أوائل من حَدَّث في هذا المسجد.

  • தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    அவர்கள், ஸதகா பின் மூஸா, இவரின் செய்தியை அறிவிக்கும் போது முஹம்மத் பின் வாஸிஃ —> ஸுமைர் பின் நஹார் என்று அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
  • இவரின் பெயரை ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் மட்டுமே ஷுதைர் பின் நஹார் என்று அறிவித்துள்ளார் என அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் கூறியதாக முஹம்மத் பின் பஷ்ஷார் தனக்கு தெரிவித்ததாக புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இவர் ஆரம்பத்தில் இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்தார் என அபூநள்ரா அவர்கள் கூறினார்.

(நூல்: தாரீகுல் கபீர்-2490)

எனவே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவரின் பெயர் ஸுமைர் பின் நஹார் என்பதே சரியானது என்று முடிவு செய்துள்ளார்.


இப்னு அபூஹாதிம்

இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், ஸுமைர் பின் நஹார், ஷுதைர் பின் நஹார் என்று இருபெயர்களையும் தனியாக குறிப்பிட்டுள்ளார். கருத்துவேறுபாட்டைக் குறிப்பிடவில்லை. என்றாலும் ஷுதைர் பின் நஹார் என்பவரின் குறிப்பில் இவரை ஸுமைர் பின் நஹார் என்று கூறப்படுகிறது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1358, 1689)


மிஸ்ஸீ இமாம்

மிஸ்ஸீ இமாம் அவர்கள், ஷுதைர் பின் நஹார் என்பவரின் குறிப்பை மட்டுமே பதிவு செய்து கருத்துவேறுபாட்டைக் குறிப்பிட்டுள்ளார். தனியாக ஸுமைர் பின் நஹார் என்ற பெயரில் குறிப்பை பதிவு செய்யவில்லை.

மிஸ்ஸீ இமாம் போன்றே குலாஸது தத்ஹீபி தஹ்தீபில் கமால் நூலாசிரியரான ஸஃபிய்யுத்தீன் அவர்களும் ஸுமைர் பின் நஹார் என்ற பெயரை தனியாக குறிப்பிடவில்லை.

(நூல்: தஹ்தீபுல் கமால்-2699, 12/378, குலாஸது தத்ஹீபி தஹ்தீபில் கமால், பக்-163)


இப்னு ஹஜர்

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், ஷுதைர் பின் நஹார் என்பவரின் குறிப்பைக் கூறியதுடன் கருத்துவேறுபாட்டையும் கூறியுள்ளார். இதைப் பற்றி விரிவாக ஸுமைர் பின் நஹார் பற்றிய குறிப்பில் கூறியுள்ளேன் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார். (ஆனால் தஹ்தீபுத் தஹ்தீபில் ஸுமைர் பின் நஹார் பற்றி தனியாக கூறவில்லை. அதை மறந்துவிட்டார் போலும்)

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/153 )


மிஸ்ஸீ இமாம், குலாஸாவின் ஆசிரியர், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் ஷுதைர் இடம்பெறும் ஹதீஸ் நூல்களைக் குறிப்பிடும் போது அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
என்ற நூலை குறிக்கும் د என்ற அடையாளத்தை மட்டுமே கூறியுள்ளனர். ஆனால் இவரின் செய்தி திர்மிதியிலும் இடம்பெற்றுள்ளது.

ஸுமைர் என்ற பெயரைக் கூறும்போது இவர் இடம்பெறும் செய்தி திர்மிதீயில் உள்ளது என்ற அடையாளமான ت வை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்.


நாம் அறிவிப்பாளர்தொடர்களை பார்க்கும் போது ஸுமைர் பின் நஹார் என்ற பெயரை ஸதகா பின் மூஸா என்பவர் மட்டுமே கூறியுள்ளார் என்று தெரிகிறது.

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள், ஹம்மாத் பின் ஸலமா தான் ஷுதைர் என்று அறிவித்துள்ளார் என்று கூறியிருந்தாலும் ஹம்மாத் பின் ஸலமாவைப் போன்று அபூநள்ரா அவர்களும் ஷுதைர் என்றே பெயரைக் கூறியுள்ளார்.

ஸதகா பின் மூஸாவை விட ஹம்மாத் பின் ஸலமா தான் பலமானவர், அதிக நினைவாற்றல் உள்ளவர். மேலும் அபூநள்ராவும் ஷுதைர் என்று கூறியிருப்பதால் இந்த இருவரின் அறிவிப்பின்படியே இவரை ஷுதைர் பின் நஹார் என்று முடிவு செய்வதே சரியானதாகும்.

மேலும் முஸ்னத் அஹ்மதின் சில பிரதிகளில் ஸதகா பின் மூஸா வழியாக ஒரே அறிவிப்பாளர்தொடரில் 3 ஹதீஸ்கள் வந்துள்ளது. இதில் தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
—> ஸதகா பின் மூஸா —> முஹம்மத் பின் வாஸிஃ —> ஷுதைர் பின் நஹார்…
என்றே இடம்பெற்றுள்ளது. இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
அவர்கள் தனது ஜாமிஉல் மஸானீத் என்ற நூலில் 2 ஹதீஸ்களில் ஷுதைர் என்றும், 1 ஹதீஸில் ஸுமைர் என்றும் கூறியுள்ளார். முஸ்னத் அஹ்மதின் வேறு சில பிரதிகளில் ஸுமைர் என்று வந்துள்ளது. அதனடிப்படையில் தான் திர்மிதீ அவர்கள் 5/583 இல் ஸதகா பின் மூஸா வழியாக ஸுமைர் என்ற பெயரை கூறியுள்ளார். எனவே ஸதகா பின் மூஸா வழியாக வரும் பெயர் குளறுபடியாக வந்துள்ளது எனத் தெரிகிறது.

இது போன்ற பல தகவல்களைக் கூறிய அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் அவர்கள் இவரின் சரியான பெயர் ஷுதைர் பின் நஹார் என்றும், இவர் சில சான்றுகளின்படி பலமானவர் என்றும் முடிவு செய்து இவர் இடம்பெறும் ஹதீஸ்களை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: முஸ்னத் அஹ்மத்-7943 இன் விளக்கம்)


ஷுதைர் பின் நஹார் அறியப்படாதவரா?

1 . ராவீ-45346-அபூநள்ரா-முன்திர் பின் மாலிக் அவர்கள், பஸராவைச் சேர்ந்தவர்; அப்தீ என்ற வமிசத்தை சேர்ந்தவர்; தாபிஈ ஆவார். இவரின் காலகட்டத்தைச் சேர்ந்தவர் தான் ஷுதைர் பின் நஹார் பஸரீ, அப்தீ ஆவார். அபூநள்ரா இவரைப் பற்றி, இவர் ஆரம்பத்தில் இந்த பஸராவின் பள்ளிவாசலில் ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்தார் என்று கூறியுள்ளார். எனவே ஷுதைர் பின் நஹாரை அபூநள்ரா அவர்கள் அறிந்துள்ளார் என்று தெரிகிறது.

2 . மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், நான் ஷுதைர் பின் நஹாரிடமிருந்து ஒரே ஒரு ஹதீஸை மட்டுமே கேட்டுள்ளேன் என்று கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அறிவித்துள்ளார். எனவே இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரை அறிந்துள்ளார் என்று தெரிகிறது.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-3384)

3 . இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்கள் இவரை ஸுமைர் பின் நஹார் என்ற பெயரில் குறிப்பிட்டு இவர் தாபிஈ, பலமானவர் என்று கூறியதாக இக்மாலு தஹ்தீபில் கமால் எனும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். (என்றாலும் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்களின் நூலில் இந்தக் தகவல் நமக்கு கிடைக்கவில்லை)

(நூல்: இக்மாலு தஹ்தீபில் கமால்-6/217)

4 . இப்னு கலஃபூன் அவர்களும் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

5 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். (ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களும் இவரின் செய்திகளை பதிவு செய்துள்ளார்)

6 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், ஸுமைர் பின் நஹார் என்ற பெயரில் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2652, 1/416, 2762, 1/431)


எனவே தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
ஆகியோர் இவரை அறியப்படாதவர் என்று கூறியிருப்பது சரியானதல்ல.

எனவே குறைந்தபட்சம் இதுபோன்ற அறிவிப்பாளர்கள் ஹஸன் தரத்தில் உள்ளவர்கள் என்பதாலும், இந்தக் கருத்து வேறு சில ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருப்பதாலும் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்.


மேலும் பார்க்க: திர்மிதீ-2353 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.