தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11396

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஹர் உணவு உண்ணுவதில் பரக்கத் இருக்கிறது. எனவே அதை விட்டுவிடாதீர்கள். ஒரு மிடரு தண்ணீரையாவது குடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 11396)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«السُّحُورُ أَكْلَةٌ بَرَكَةٌ فَلَا تَدَعُوهُ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جَرْعَةً مِنْ مَاءٍ، فَإِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11396.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-11181.




إسناد ضعيف فيه عبد الرحمن بن زيد القرشي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் ஸைத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-11086 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.