தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11086

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஹர் உணவு உண்ணுவதில் பரக்கத் இருக்கிறது. எனவே அதை விட்டுவிடாதீர்கள். ஒரு மிடரு தண்ணீரையாவது குடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 11086)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي رِفَاعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«السَّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ، فَلَا تَدَعُوهُ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11086.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10876.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூரிஃபாஆ யார் என்பதில் தெளிவு இல்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…

1 . இந்தக் கருத்தில் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-11086 , 11281 , 11396 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8920 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8064 ,

மேலும் பார்க்க : இப்னு ஹிப்பான்-3467 .

  • ஸஹர் உணவு உண்ணுவது பற்றியும் அதில் பரக்கத் இருக்கிறது என்பது பற்றியும் சரியான ஹதீஸ்கள் உள்ளன.

பார்க்க : புகாரி-1923 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.