தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11898

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நம்பிக்கை கொண்டோர் நரகிலிருந்து தப்பித்து நிம்மதியை பெற்று விடுவார்கள். உங்களில் ஒருவர் தனது தோழருக்காக இந்த உலகில் வாக்குவாதம் செய்வதை விட மறுமையில் அவரை நரகிலிருந்து காப்பாற்றுவதற்கு செய்யும் வாக்குவாதம் மிக கடுமையாகவே இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (அதைப் பற்றி விவரமாக) கூறினார்கள்:

எங்கள் ரப்பே! உலகில் சில தோழர்கள் எங்களுடன் சேர்ந்து தொழுதார்கள். எங்களுடன் சேர்ந்து நோன்பு வைத்தார்கள். எங்களுடன் சேர்ந்து ஹஜ் செய்தார்கள். நீ அவர்களை நரகில் போட்டுள்ளாய்! என்று நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்விடம் கூறுவார்கள். உடனே, நீங்கள் (நரகம்) சென்று உங்களுக்கு தெரிந்தவர்களை அதிலிருந்து வெளியேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுவான்.

உடனே அவர்கள் நரகம் சென்று காண்பார்கள். அங்கு சிலர் பாதிக்கால் வரை நரகால் கருகி இருப்பார்கள். சிலர் பாதம் வரை கரிந்து இருப்பார்கள். எனவே அவர்களின் தோற்றத்தின் மூலம் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை நரகிலிருந்து வெளியே கொண்டு வருவார்கள்.

அவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம், அல்லாஹ்வே (நீ நாடிய சிலரை) உனது கட்டளையால் நாங்கள் வெளியேற்றவேண்டும் என்று கூறுவார்கள்.

எனவே, “யாருடைய உள்ளத்தில் ஒரு தீனார் அளவு ஈமான் உள்ளதோ அவர்களை வெளியேற்றுங்கள்; பிறகு யாருடைய உள்ளத்தில் பாதி தீனார் அளவு ஈமான் உள்ளதோ அவர்களை வெளியேற்றுங்கள்; பிறகு யாருடைய உள்ளத்தில் அணுவளவு ஈமான் உள்ளதோ அவர்களை வெளியேற்றுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். 

அபூஸயீத் (ரலி) கூறுகிறார்கள்:
இதை உண்மையென நம்பமுடியாதவர், “அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான். (அல்குர்ஆன்: 4:40) எனும் இறைவசனத்தை ஓதிப்பார்க்கட்டும்.

பிறகு நம்பிக்கைக் கொண்டோர், “எங்கள் ரப்பே! நீ எங்களுக்கு கட்டளையிட்டவர்களை நாங்கள் நரகிலிருந்து வெளியேற்றிவிட்டோம். இப்போது எந்த நன்மையும் செய்யாதவர்கள் மட்டுமே மீதியுள்ளனர்” என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் கூறுவான்:

வானவர்கள் பரிந்துரை செய்துவிட்டனர்; நபிமார்கள் பரிந்துரை செய்துவிட்டனர்; நம்பிக்கைக் கொண்டோர் பரிந்துரை செய்துவிட்டனர்; கருணையாளர்களில் பெரும் கருணையாளனான நான் தான் மீதமிருக்கிறேன்.

(நபி-ஸல்-அவர்கள் கூறினார்கள்)

பிறகு, எந்த நன்மையும் செய்யாமல் நரகில் கிடந்து கரிக்கட்டைகளாக மாறிய சிலரை ஒரு கைப்பிடி அல்லது இரு கைப்பிடியின் மூலம் அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான். அவர்கள் (ஜீவநீரூற்றான) ஹயாத் ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள்மீது அதை ஊற்றப்படும். உடனே அவர்கள் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். பிறகு அங்கிருந்து அவர்கள் முத்துக்களைப் போன்று பொலிவடைந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்தில் அல்லாஹ்வால் விடுதலை செய்யப்பட்டவர்கள் என்ற முத்திரை இருக்கும்.

அவர்களுக்கு (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) கூறப்படும்:

நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியது அல்லது நீங்கள் பார்த்து ஆசைப்படக்கூடியது எதுவாக இருந்தாலும் அதைவிடச் சிறந்தது உங்களுக்கு கிடைக்கும்.

அப்போது அவர்கள், எங்கள் இறைவா! அதைவிடச் சிறந்தது என்ன? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், என்னுடைய பொருத்தம் எப்போதும் உங்கள் மீது இருக்கும். இனி எப்போதும் உங்கள் மீது நான் கோபப்படமாட்டேன் என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்னது அஹமது: 11898)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَأَمِنُوا، فَمَا مُجَادَلَةُ أَحَدِكُمْ لِصَاحِبِهِ فِي الْحَقِّ يَكُونُ لَهُ فِي الدُّنْيَا، بِأَشَدَّ مُجَادَلَةً لَهُ، مِنَ الْمُؤْمِنِينَ لِرَبِّهِمْ فِي إِخْوَانِهِمُ الَّذِينَ أُدْخِلُوا النَّارَ» قَالَ: ” يَقُولُونَ: رَبَّنَا إِخْوَانُنَا كَانُوا يُصَلُّونَ مَعَنَا، وَيَصُومُونَ مَعَنَا، وَيَحُجُّونَ مَعَنَا، فَأَدْخَلْتَهُمُ النَّارَ ” قَالَ: فَيَقُولُ: ” اذْهَبُوا فَأَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ، فَيَأْتُونَهُمْ فَيَعْرِفُونَهُمْ بِصُوَرِهِمْ، لَا تَأْكُلُ النَّارُ صُوَرَهُمْ، فَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ النَّارُ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ، وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ إِلَى كَعْبَيْهِ، فَيُخْرِجُونَهُمْ، فَيَقُولُونَ: رَبَّنَا أَخْرَجْنَا مَنْ أَمَرْتَنَا، ثُمَّ يَقُولُ: أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ دِينَارٍ مِنَ الْإِيمَانِ، ثُمَّ مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ نِصْفِ دِينَارٍ، حَتَّى يَقُولَ: مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ “. قَالَ أَبُو سَعِيدٍ: فَمَنْ لَمْ يُصَدِّقْ بِهَذَا، فَلْيَقْرَأْ هَذِهِ الْآيَةَ: {إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا} [النساء: 40] قَالَ: ” فَيَقُولُونَ: رَبَّنَا قَدْ أَخْرَجْنَا مَنْ أَمَرْتَنَا، فَلَمْ يَبْقَ فِي النَّارِ أَحَدٌ فِيهِ خَيْرٌ ” قَالَ: ” ثُمَّ يَقُولُ اللَّهُ: شَفَعَتِ الْمَلَائِكَةُ، وَشَفَعَ الْأَنْبِيَاءُ، وَشَفَعَ الْمُؤْمِنُونَ، وَبَقِيَ أَرْحَمُ الرَّاحِمِينَ “، قَالَ: ” فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ، – أَوْ قَالَ: قَبْضَتَيْنِ – نَاسٌ لَمْ يَعْمَلُوا لِلَّهِ خَيْرًا قَطُّ قَدِ احْتَرَقُوا حَتَّى صَارُوا حُمَمًا “، قَالَ: ” فَيُؤْتَى بِهِمْ إِلَى مَاءٍ يُقَالُ لَهُ: مَاءُ الْحَيَاةِ، فَيُصَبُّ عَلَيْهِمْ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، فَيَخْرُجُونَ مِنْ أَجْسَادِهِمْ مِثْلَ اللُّؤْلُؤِ، فِي أَعْنَاقِهِمُ الْخَاتَمُ: عُتَقَاءُ اللَّهِ “، قَالَ: ” فَيُقَالُ لَهُمْ: ادْخُلُوا الْجَنَّةَ، فَمَا تَمَنَّيْتُمْ أَوْ رَأَيْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ لَكُمْ عِنْدِي أَفْضَلُ مِنْ هَذَا “، قَالَ: ” فَيَقُولُونَ: رَبَّنَا وَمَا أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ ” قَالَ: «فَيَقُولُ رِضَائِي عَلَيْكُمْ فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ أَبَدًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-11463.
Musnad-Ahmad-Shamila-11898.
Musnad-Ahmad-Alamiah-11463.
Musnad-Ahmad-JawamiulKalim-11680.




மேலும் பார்க்க: முஸ்லிம்-302 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.