தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12087

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பட்ட) ‘குர்ரா’ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும் படையினர் அனைவரும் கொல்லப்பட்டதற்காக நபி (ஸல்) அவர்கள் கவலைப்பட்டதைப் போன்று வேறெதற்காகவும் கவலைப்படவில்லை.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஃப்யான் (ரஹ்), இவர்களின் விசயமாகத் தான் “நாங்கள் எங்கள் இறைவனை குறித்துத் திருப்தியடைந்தோம்; அவனும் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள்’ என்ற வசனம் இறங்கிற்று என்று கூறினார். அப்போது அவர்களிடம், “யார் விசயத்தில்? என்று கேட்கப்பட அவர், பிஃரு மஊனாவில் கொல்லப்பட்ட குர்ஆன் அறிஞர்கள் விசயத்தில் என்று பதிலளித்தார்.

(முஸ்னது அஹ்மத்: 12087)

حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ قَالَ:

«مَا وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سَرِيَّةٍ مَا وَجَدَ عَلَيْهِمْ، كَانُوا يُسَمَّوْنَ الْقُرَّاءَ»

قَالَ سُفْيَانُ: ” نَزَلَ فِيهِمْ: «بَلِّغُوا قَوْمَنَا عَنَّا أَنَّا قَدْ رَضِينَا وَرَضِيَ عَنَّا»

قِيلَ لِسُفْيَانَ: فِيمَنْ نَزَلَتْ؟ قَالَ: «فِي أَهْلِ بِئْرِ مَعُونَةَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12087.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-11863.




மேலும் பார்க்க: புகாரி-1001 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.