தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12697

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தாடியில் உளுச் செய்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்க, இடது கையில் இரு செருப்புக்களையும் பிடித்தவராக வருகை தந்தார். மறுநாள் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள்.

அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்தில் வந்தார். அதற்கு அடுத்த நாளும் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்திலேயே வருகை தந்தார்.

நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றதும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அம்மனிதரை பின் தொடர்ந்து சென்று அவரிடம், எனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையின் காரணமாக அவரிடத்தில் மூன்று நாட்கள் தங்கமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். எனவே அந்த நாட்களில் உங்களுடன் தங்க அனுமதியளித்தால் அதனை நான் நிறைவேற்றிவிடுவேன் என்று கூறினார். அதற்கவர் சம்மதம் தெரிவித்தார். ஒரு இரவோ, அல்லது மூன்று இரவுகளோ அவருடன் தங்கி அவரைக் கவனித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது,

அவர் இரவு தொழுகையை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. ஆனால் படுக்கையில் புரண்டு படுக்கும் போதும் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதும் தக்பீர் மற்றும் திக்ர் செய்து கொள்வார். பிறகு ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து விடுவார்.

மேலும் நல்லவற்றைத் தவிர வேறு எதையும் அவர் பேச நான் கேட்கவில்லை. இவ்வாறு மூன்று இரவுகள் கழிந்த பிறகு நான் அவருடைய அமல்களை மிகவும் குறைவாக மதிப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் அடியாரே!நிச்சயமாக எனக்கும் எனது தந்தைக்கும் மத்தியில் கோபத்தால் பிளவு ஏற்படும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் நிகழவில்லை. நபி (ஸல்) அவர்கள் இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார் என்று மூன்று தடவை உங்களைப் பற்றி கூறக் கேட்டேன். அந்த மூன்று தடவைகளும் நீங்கள்தான் வருகை தந்தீர்கள்! எனவே உங்களுடன் தங்கியிருந்து உங்கள் அமல்களை பார்த்து அதனைப் பின்பற்ற விரும்பினேன். நான் கண்டவரை நீங்கள் பெரிய அமல் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்க, நபி (ஸல்) அவர்கள் உங்களைப் பற்றி இவ்வாறு கூறும் அளவிற்கு உம்மை உயர்த்தியது எது? என்று அவரிடம் கேட்டேன். அதற்கவர், நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை! என்று கூறினார். இந்நிலையில் நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். நான் சிறிது தூரம் வந்த பிறகு அவர் என்னை அழைத்து, நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை. அதனுடன், எந்த முஸ்லிமுக்கும் மோசடி செய்ய நினைக்கமாட்டேன். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி நான் பொறாமை கொள்ளவும் மாட்டேன் என்றார். அப்போது, இவைகள்தான் உம்மை அந்த அளவிற்கு உயர்த்தி விட்டது. இதனை செயல்படுத்த முடியாதவர்களாகத்தான் நாங்கள் உள்ளோம்! என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 12697)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ:

كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَطْلُعُ عَلَيْكُمُ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ» فَطَلَعَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ، قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ، فَلَمَّا كَانَ الْغَدُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ ذَلِكَ، فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى. فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا، فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى، فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ: إِنِّي لَاحَيْتُ أَبِي فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا، فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ؟ قَالَ: نَعَمْ. قَالَ أَنَسٌ: وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي الثَّلَاثَ، فَلَمْ يَرَهُ يَقُومُ مِنَ اللَّيْلِ شَيْئًا، غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ، حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ. قَالَ عَبْدُ اللَّهِ: غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا، فَلَمَّا مَضَتِ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْقِرَ عَمَلَهُ، قُلْتُ: يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ: «يَطْلُعُ عَلَيْكُمُ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ» فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ مِرَارٍ، فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ، فَأَقْتَدِيَ بِهِ، فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ، فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ. قَالَ: فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي، فَقَالَ: مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ، غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا، وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ. فَقَالَ عَبْدُ اللَّهِ هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ، وَهِيَ الَّتِي لَا نُطِيقُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12697.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12459.




இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள்:

1 . அப்துர் ரஸ்ஸாக் —> மஃமர் —> ஸுஹ்ரீ —> அனஸ் (ரலி)

2 . அப்துல்லாஹ் பின் முபாரக் —> மஃமர் —> ஸுஹ்ரீ —> அனஸ் (ரலி)

3 . ஷுஐப் பின் அபூஹம்ஸா —> ஸுஹ்ரீ —> ஒரு மனிதர் —> அனஸ் (ரலி)

4 . உகைல் —> ஸுஹ்ரீ —> ஒரு மனிதர் —> அனஸ் (ரலி)

ஸுஹ்ரீ அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதால் வெளிப்படையில் இந்த செய்தியை சிலர் சரி எனக் கூறலாம். ஸுஹ்ரீ அனஸ் (ரலி) யிடமிருந்து சில ஹதீஸ்களை நேரடியாக அறிவித்துள்ளார். அவை சரியானவை. நேரடியாக கேட்காமல் வரும் செய்திகள் ஆய்வின் படி முடிவு செய்ய வேண்டும். அதனடிப்படையில் இதில் ஒரு இல்லத் (நுணுக்கமான குறை) உள்ளது.

  • மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர்களில் அப்துர்ரஸ்ஸாக், இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    போன்றோர் மஃமர் வழியாக ஸுஹ்ரீ அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை கேட்டதாக அறிவிக்கின்றனர்.
  • ஷுஐப் பின் அபூஹம்ஸாவும், உகைல் அவர்களும் ஸுஹ்ரீ அவர்களுக்கும், அனஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதரை அறிவிக்கின்றனர்.
  • (ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களில் யாருக்கு முதலிடம் தரவேண்டும் என்பதில் சில அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு உள்ளது) ஷுஐப் பின் அபூஹம்ஸாவும், உகைலும், மஃமர் அவர்களை விட பலமானவர்கள் என்பதால் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் அவர்கள் இந்த செய்தியை ஸுஹ்ரீ அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என கூறுகின்றார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா 12/203)

  • ஹம்ஸா அல்கினானீ அவர்களும் இந்த செய்தியை ஸுஹ்ரீ அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என கூறுகிறார்.

(நூல்: துஹ்ஃபதுல் அஷ்ராஃப் 1/395)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் இதில் குறை உள்ளது என்று கூறியுள்ளார்.

(நூல்: அன்னிகதுள் ளிராஃப்)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இந்த செய்தியை ஆரம்பத்தில் சரியானது என்று கூறினாலும் பிறகு பலவீனமானது என்றே முடிவுசெய்துள்ளார்.

(நூல்: ளயீஃப் தர்ஃகீப் 2/245-248)

  • சிலர் இந்த செய்தியை ஹஸன் என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-12697 , குப்ரா நஸாயீ-10633 , ஷுஅபுல் ஈமான்-6181 , 6182 ,

7 comments on Musnad-Ahmad-12697

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      சிலர் இந்த செய்தியை விமர்சித்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றி விரைவில் பதிவு செய்யப்படும்.

  1. Mele ulle hadith sahih daan. Zuhri imam anas r. A rindhu pal hadis arvittadaagaa Kaanaa adhaaram sahih Bukhari il ullathu.

    Udharanam :- Sahih bukhari 530.
    Adil avar anas r. A neradiyaagaa sandittu pesiyaa kaana adhaaram ullathu.

    தமிழில்..
    (மேலே உள்ள ஹதீஸ் ஸஹீஹ் தான். ஸுஹ்ரீ இமாம் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததற்கான ஆதாரம் ஸஹீஹ் புகாரியில் உள்ளது.

    உதாரணம் :- ஸஹீஹ் புகாரீ 530
    அதில் அவர் அனஸ் (ரலி) யை நேரடியாக சந்தித்து பேசியதற்கான ஆதாரம் உள்ளது.(தமிழ்-அப்துல் ஹகீம்)

    1. https://www.google.co.in/intl/ta/inputtools/try/

      சகோ, தங்களுக்கு தமிழ் தெரியாது என்று கூறி உள்ளீர்கள். எனினும் படிக்க சிரமாக உள்ளது. இதை பயன்படுத்தி, முடிந்தால் தமிழில் பதிவிடவும்.

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.

        இல்லை சகோ. ஸுஹ்ரீ அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார் என்பதற்கு தான் சகோ. Shahbaaaz அவர்கள் புகாரீ ஹதீஸை ஆதாரமாக கூறியுள்ளார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.