அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!.
ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு)த் பொருளாளான இரு நீரோடை இருந்தால் தனக்கு மூன்றாவதாக ஒரு நீரோடை இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 13049)حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مَسْعَدَةَ الْبَاهِلِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ، فَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ، وَلَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ مَالٍ، لَابْتَغَى لَهُمَا ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13049.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12800.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவர்பற்றி இவரிடம் ஆட்சேபணை உண்டு என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், இவர் பலவீனமானவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களும், இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸயீ அவர்களும் இவரது ஹதீஸ்கள் ஏற்புடையவை அல்ல என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களும் கூறியுள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம் : 7, பக் : 381
- இதன் இரண்டாவது பகுதி சிறிது மாற்றத்துடன் சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. பார்க்க: புகாரி-6439 .
மேலும் பார்க்க: திர்மிதீ-2499 .
சமீப விமர்சனங்கள்