நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஏற்றுக் கொண்டு, உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணிந்து, அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே.
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுத்து, உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடி, அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்.
அறிவிப்பவர்கள் : அபூ ஹுமைத் (ரலி), அபூ உஸைத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 16058)حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، وأَبِي أُسَيْدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تَعْرِفُهُ قُلُوبُكُمْ، وَتَلِينُ لَهُ أَشْعَارُكُمْ، وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ قَرِيبٌ، فَأَنَا أَوْلَاكُمْ بِهِ، وَإِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تُنْكِرُهُ قُلُوبُكُمْ، وَتَنْفِرُ أَشْعَارُكُمْ، وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ بَعِيدٌ فَأَنَا أَبْعَدُكُمْ مِنْهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-15478.
Musnad-Ahmad-Shamila-16058.
Musnad-Ahmad-Alamiah-15478.
Musnad-Ahmad-JawamiulKalim-15725.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-16058 , 23606 , முஸ்னத் பஸ்ஸார்-3718 , இப்னு ஹிப்பன்-63 ,
கூடுதல் தகவல் பார்க்க: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது .
tntj சார்பாக இந்த ஹதீசை மேற்கோள் காட்டிதான் பல ஹதீஸ்கள் மறுக்கப்படுகிறது. இது எந்த அடிபடையில் பலஹீனம் என்று கூறவும்.
பதில் ஏராளமான விமர்சனங்களையும், பதில்களையும் உள்ளடக்கியுள்ளது. எனவே, மிக விரிவான பதிலை பதிவு செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
Jazakallah
Unmai
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
சமுரா பின் ஜுன்தப் (ரலி)
முஸ்லிம் 1
அஸ்ஸலாமு அலைக்கும்..இதன் தரத்தை இன்ஷா அல்லாஹ் பதிவுசெய்யவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
போட்டாச்சி…