தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16466

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழும் திடலுக்குச் சென்றார்கள். (திடலில்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்ற போது, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்பாத் பின் தமீம் (ரஹ்)

இமாம் அஹ்மத் கூறுகிறார்:

அறிவிப்பாளர் இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றுவதற்கு (பிரார்த்தனை செய்வதற்கு) முன்பு தொழுகையைத் துவங்கினார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்தனை செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

(முஸ்னது அஹ்மத்: 16466)

قَرَأْتُ عَلَى عَبْدِ الرَّحْمَنِ: مَالِكٌ، وَحَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ عَبَّادِ بْنِ تَمِيمٍ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الْمَازِنِيَّ يَقُولُ:

«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى وَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ» ،

قَالَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ: وَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَدَعَا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-15871.
Musnad-Ahmad-Shamila-16466.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16122.




நபி (ஸல்) அவர்கள் நடத்திய மழைத்தொழுகையைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ்கள் இரண்டு விதமாக அமைந்துள்ளன.

  • நபி (ஸல்) அவர்கள் முதலில் பிரார்த்தனை செய்துவிட்டு இறுதியாகத் தொழுகை நடத்தினார்கள் என்று பல ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
  • சில ஹதீஸ்களில் இதற்கு மாற்றமாக முதலில் தொழுகை நடத்திவிட்டு இறுதியாகப் பிரார்த்தனை செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தியில் இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அவர்களின் மாணவரான இஸ்ஹாக் என்பவரே பிரார்த்தனைக்கு முன்பாக தொழுகையைத் துவக்கினார்கள் என்ற தவறான தகவலைக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அவர்களிடமிருந்து…

  1. இஸ்ஹாக்
  2. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ
  3. யஹ்யா பின் யஹ்யா
  4. குதைபா பின் சயீத்
  5. அப்துல்லாஹ் பின் மஸ்லமா
  6. இமாம் ஷாஃபிஈ
  7. இப்னு வஹப்

ஆக மொத்தம் 7 நபர்கள் அறிவிக்கின்றார்கள். இவர்களில் இஸ்ஹாக் என்பவர் மட்டுமே பிரார்த்தனைக்கு முன்பாக தொழுகையைத் துவக்கினார்கள் என்ற தகவலைக் கூறியுள்ளார். இவரல்லாத மீதமுள்ள ஆறு நபர்களும் இந்தத் தகவலைக் கூறவில்லை. இவர்கள் அனைவரும் இஸ்ஹாக்கை விட மிக வலுவானவர்கள்.

இஸ்ஹாக்கிற்கு மாற்றமாக 11 அறிவிப்புகள் வந்துள்ளது. எனவே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்கு முன்பாகத் தொழுகையைத் துவக்குவார்கள் என்று இஸ்ஹாக் கூறியது கூடுதல் தகவல் இல்லை. இவர் தவறுதலாக கூறிய வார்த்தை.

ஆய்வின் சுருக்கம்

  • நபி (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையில் முதலில் பிரார்த்தனை ஈடுபட்டார்கள். பிறகு தொழுகை நடத்தினார்கள் என்று பல பலமான அறிவிப்பாளர்கள் அறிவிப்பதால் இதுவே சரியான தகவலாகும். இதனடிப்படையில் செயல்பட வேண்டும்.
  • இதற்கு மாற்றமாக நபியவர்கள் முதலில் தொழுதார்கள். பிறகு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாகும். இதனடிப்படையில் செயல்படக்கூடாது.

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-511 , அஹ்மத்-16432 , 16434 , 16435 , 16436 , 16437 , 16439 , 16448 , 16451 , 16455 , 16466 , 16460 , 16462 , 1646516468 , 16473 , தாரிமீ-1574 , 1575 , புகாரி-1005 , 1011 , 1012 , 1023 , 1024 , 1025 , 1026 , 1027 , 1028 , 6343 , முஸ்லிம்-1626 , 1627 , 1628 , 1629 , இப்னு மாஜா-1267 , அபூதாவூத்-11611162 , 1163 , 1164 , 1166 , 1167 , திர்மிதீ-556 , நஸாயீ-1505 , 1507 , 1509 , 1510 , 1511 , 1512 , 1519 , 1520 , 1522 , இப்னு குஸைமா-1407 , குப்ரா பைஹகீ-6414 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-6401 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1165 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.