அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டார்கள். பாங்கும் இகாமத்தும் இன்றி இரண்டு ரக்அத் தொழவைத்தார்கள். பிறகு எங்களிடம் உரையாற்றிவிட்டு கிப்லாவை முன்னோக்கி தன் கைகளை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு தம் மேலாடையின் வலப்புறத்தை இடப்புறமாகவும் இடப்புறத்தை வலப்புறமாகவும் மாற்றிப் போட்டார்கள்.
(பைஹகீ-குப்ரா: 6401)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو بَكْرِ بْنُ الْحَسَنِ الْقَاضِي قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ سِنَانٍ الْقَزَّازُ، ثنا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، ثنا أَبِي قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ هُوَ ابْنُ رَاشِدٍ يُحَدِّثُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يَسْتَسْقِي، فَصَلَّى رَكْعَتَيْنِ بِلَا أَذَانٍ وَلَا إِقَامَةٍ، ثُمَّ خَطَبَنَا، فَدَعَا اللهَ، وَحَوَّلَ وَجْهَهُ نَحْوَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ، ثُمَّ قَلْبَ رِدَاءَهُ، فَجَعَلَ الْأَيْمَنَ عَلَى الْأَيْسَرِ وَالْأَيْسَرَ عَلَى الْأَيْمَنِ
تَفَرَّدَ بِهِ النُّعْمَانُ بْنُ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6401.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
- இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் முதலில் தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் நுஃமான் பின் ராஷித் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று ஏராளமான இமாம்கள் கூறியுள்ளனர். யஹ்யா பின் சயீத், அஹ்மது பின் ஹம்பள், இமாம் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயி, இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுல் கமால்)
இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் இவருடைய இந்த அறிவிப்பைப் பதிவு செய்து விட்டு இமாம் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து பல மாணவர்கள் ஒரு விதமாக அறிவித்திருக்கையில் இவர் மட்டும் வேறு விதமாக தனித்து அறிவித்துள்ளார் என்று குறிப்பிடுகிறார்கள்.
இமாம் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து…
- ஷுஐப்
- இப்னு அபீ திஃப்
- யூனுஸ்
- ஸாலிஹ்
- நுஃமான் பின் ராஷித்
ஆகியோர் அறிவிக்கின்றனர். இவர்களில் பலவீனமானவரான நுஃமான் பின் ராஷித் மட்டும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்கு முன்பு தொழுதார்கள் என்று அறிவிக்கின்றார்.
மற்றவர்கள் இதற்கு மாற்றமாக, முதலில் பிரார்த்தனை செய்து விட்டுப் பிறகு தொழுதார்கள் என்று அறிவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் மிக நம்பகமானவர்கள்.
நுஃமான் பின் ராஷித் பலவீனமானவர் என்பதாலும் மற்ற நம்பகமானவர்களுக்கு முரணாக அறிவிப்பதாலும் இவருடைய செய்தி முன்கர் என்ற மிக பலவீனமான செய்தியாகும்.
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-8327 , இப்னு மாஜா-1268 , இப்னு குஸைமா-1409 , 1422 , குப்ரா பைஹகீ-6401 , …
மேலும் பார்க்க: அஹ்மத்-16466 .
சமீப விமர்சனங்கள்