தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16651

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தனது பாட்டி வழியாக ரபாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹுவைத்திப் அறிவிக்கும் ஹதீஸ்கள்.

உளூச்செய்யாமல் தொழுதவர் தொழுதவராக ஆகமாட்டார். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தவர் உளூச் செய்தவராக ஆகமாட்டார். என்னை நம்பிக்கைகொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 16651)

حَدِيثُ رَبَاحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُوَيْطِبٍ، عَنْ جَدَّتِهِ

حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، قَالَ عَبْدُ اللَّهِ: وَقَدْ سَمِعْتُهُ أَنَا مِنَ الْهَيْثَمِ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنِ ابْنِ حَرْمَلَةَ، عَنْ أَبِي ثِفَالٍ الْمُرِّيِّ أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَبَاحَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُوَيْطِبٍ يَقُولُ: حَدَّثَتْنِي جَدَّتِي، أَنَّها سَمِعَتْ أَبَاهَا يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اللَّهَ تَعَالَى، وَلَا يُؤْمِنُ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَا يُؤْمِنُ بِي مَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16651.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16304.




إسناد ضعيف فيه ثمامة بن وائل الشاعر وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஸிஃபால்-ஸுமாமா பின் வாயில் பலவீனமானவர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் விமர்சித்துள்ளார்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1 / 275 )
  • உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் கூறுவது அவசியம் என்ற கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகும். சிலர் அனைத்து செய்திகளையும் இணைத்து ஹஸன் என்று கூறுகின்றனர்.
  • இந்தச்செய்தியை ஆதாரமாக ஏற்பவர்களில் சிலர் உளூவின் போது பிஸ்மில்லாஹ் கூறுவது கட்டாயம் எனவும், சிலர் வேறு ஹதீஸ்களின்படி ஸுன்னத் எனவும் கூறுகின்றனர்.

1 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-239 , 240 , இப்னு அபீ ஷைபா-15 , 28 , அஹ்மத்-16651 , 16652 , 23236 , 27145 , 27147 , இப்னு மாஜா-398 , திர்மிதீ-25 , 26 , தாரகுத்னீ-225 , 226 , 227 , 228 , 229 , 230 , குப்ரா பைஹகீ-193 , 194 ,

2 . அஸ்மா பின்த் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27146 , ஹாகிம்-6899 ,

மேலும் பார்க்க: 3 . அபூதாவூத்-101 , 4 . அஹ்மத்-11370 , 5 . இப்னு மாஜா-400 , 6 . அல்முஃஜமுல் கபீர்-755 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.