ராஷித் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பாரசீக நாட்டின்) இஸ்தக்ர் பகுதி வெற்றிக்கொள்ளப்பட்டபோது ஒருவர், “எச்சரிக்கை! (இதோ) தஜ்ஜால் (வெளி)வந்துவிட்டான்” என்று மக்களுக்கு அறிவிப்பு செய்தார். (எனவே மக்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டனர்). அந்த மக்களை, ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கண்டு, நீங்கள் இவ்வாறு தஜ்ஜாலைப் பற்றி பேசாமல் இருந்திருந்தால் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற) ஒரு செய்தியை உங்களுக்கு அறிவித்திருப்பேன்.
(அது என்னவெனில்) “மக்கள் தஜ்ஜாலைப் பற்றி பேசுவதை மறந்துவிடும் போதும், இமாம்கள் உரைமேடைகளில் அவனைப் பற்றி கூறாமல் இருக்கும் போதும் (தான்) தஜ்ஜால் வெளிப்படுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்று அறிவித்தார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 16667)قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ حَدَّثَنِي أَبُو حُمَيْدٍ الْحِمْصِيُّ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ بْنِ سَيَارٍ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ قَالَ:
لَمَّا فُتِحَتْ إِصْطَخْرُ نَادَى مُنَادٍ: أَلَا إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ، قَالَ: فَلَقِيَهُمُ الصَّعْبُ بْنُ جَثَّامَةَ قَالَ: فَقَالَ: لَوْلَا مَا تَقُولُونَ لَأَخْبَرْتُكُمْ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْرُجُ الدَّجَّالُ حَتَّى يَذْهَلَ النَّاسُ عَنْ ذِكْرِهِ، وَحَتَّى تَتْرُكَ الْأَئِمَّةُ ذِكْرَهُ عَلَى الْمَنَابِرِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16667.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15506-ராஷித் பின் ஸஃத் அவர்கள் ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்களிடம் செவியேற்றாரா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
காரணம் ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) எப்போது மரணித்தார்கள் என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது.
இதைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்:
1 . ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மரணமடைந்தார் என்று சிலரும், உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் கடைசியில் மரணமடைந்தார் என்று சிலரும், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் (அதாவது ஹிஜ்ரீ 35 இல்) மரணமடைந்தார் என்று சிலரும் கூறியுள்ளனர்.
«المعرفة والتاريخ – ت العمري – ط العراق» (3/ 309):
«وقال يعقوب بن سفيان: أخطأ من قال أن الصعب بن جثامة مات في خلافة أبي بكر خطأ بينا»
இவற்றில் மூன்றாவது கருத்தே சரியானது என்று யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் இஸ்தக்ர் நகரம் வெற்றிக்கொள்ளப்பட்டது)
(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-3/309, தாரீகுல் இஸ்லாம்-3/232, அல்இஸாபா-3/344)
2 . ராஷித் பின் ஸஃத் அவர்கள், ஹிஜ்ரீ108 இல் மரணமடைந்தார் என்று சிலரும் ஹிஜ்ரீ 113 இல் மரணமடைந்தார் என்று சிலரும் கூறியுள்ளனர். இவற்றில் ஹிஜ்ரீ 113 இல் மரணமடைந்தார் என்றே அதிகமான வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
(இக்மாலு தஹ்தீபில் கமால்-2500, 6/370)
இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், ராஷித் பின் ஸஅத், (ஹிஜ்ரீ 54 இல் மரணமடைந்த) ஸவ்பான் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
அபூஸுர்ஆ அவர்கள், ராஷித் பின் ஸஅத், (ஹிஜ்ரீ 58 இல் மரணமடைந்த) ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/583, …)
இதனடிப்படையில் ராஷித் பின் ஸஅத், (ஹிஜ்ரீ 35 இல் மரணமடைந்த) ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்களிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் கூறியுள்ளனர்.
- புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் (ஹிஜ்ரீ 37 இல் நடைப்பெற்ற) ஸிஃப்பீன் போரில் கலந்துக்கொண்டபோது இவரின் ஒரு கண் போய்விட்டது என்ற தகவலை குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தாரீகுல் கபீர்-3858)
1 . ராஷித் பின் ஸஅத், ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதின்படி இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
(நூல்: அல்இஸாபா-5/253)
2 . ராஷித் பின் ஸஅத், ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்பதற்கு வாய்ப்புள்ளது என்பதின் படி ஹைஸமீ, அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றோர் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.
(நூல்: மஜ்மஉஸ் ஸவாயித்-7/335, கிஸ்ஸதுத் தஜ்ஜால், பக்கம்-30)
- ராஷித் பின் ஸஅத், ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொண்டாலும் இதில் வேறு இரு குறைகள் உள்ளன.
முதல் குறை
1 . ராவீ-9319-பகிய்யது பின் வலீத் பற்றி (தத்லீஸ் தஸ்வியஹ்) செய்பவர் என்றும், பலவீனமானவர்கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு உள்ளது என்றும், தவறிழைப்பவர் என்றும் நான்கு வகையான விமர்சனம் உள்ளது. எனவே சில நிபந்தனைகளின் படி இருந்தால் மட்டுமே இவரின் செய்திகள் ஏற்கப்படும் என ஹதீஸ்கலை அறிஞர்களில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் கூறியுள்ளனர்.
1 . இவரின் ஆசிரியர் பலமானவராக இருக்க வேண்டும்.
2 . இவரின் ஆசிரியர் இவர் ஊரைச் சேர்ந்த ஷாம் வாசியாக இருக்க வேண்டும். (உதாரணமாக-பஹீர் பின் ஸஃத், முஹம்மது பின் ஸியாத் போன்றவர்கள்)
3 . தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும்.
4 . இவரின் ஆசிரியருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும்.
5 . இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஷாம் வாசியாக இருக்க கூடாது. அவர் பலமானவராக இருந்தால் போதும்.
இவற்றில் 5வது நிபந்தனை இந்த செய்தியில் இல்லை என்பதுடன், பகிய்யா மட்டுமே இந்த செய்தியை தனித்து அறிவிக்கிறார். இவர் தனித்து அறிவிக்கும் செய்தியை ஏற்கக்கூடாது என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இரண்டாவது குறை
இந்த செய்தியை இப்னு கானிஃ அவர்கள் தனது முஃஜமுஸ் ஸஹாபாவில், “மக்கள் அல்லாஹ்வை நினைவுகூருவதை மறக்கும்போது தஜ்ஜால் வெளிப்படுவான்” என்ற கருத்தில் தான் பதிவு செய்துள்ளார். இந்த கருத்தை பகிய்யாவிடமிருந்து அம்ர் பின் உஸ்மான் அறிவித்துள்ளார். எனவே இந்த செய்தியின் கருத்தில் குளறுபடி உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.
(என்றாலும் பகிய்யாவிடமிருந்து அறிவிக்கும் ஹைவா, அப்துல்வஹ்ஹாப், அம்ர் பின் உஸ்மான் மூவரும் பலமானவர்கள். மூவருமே பகிய்யாவின் ஊரான ஹிம்ஸ் என்ற பகுதியை சேர்ந்தவர்கள். மற்ற இருவர் முஃஜமுஸ் ஸஹாபாவில் உள்ள கருத்தை அறிவிக்கவில்லை என்பதால் அம்ர் பின் உஸ்மானின் அறிவிப்பைவிட மற்றவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும்)
எனவே மேற்கண்ட தகவல்களிலிருந்து இந்த செய்தியை பகிய்யா பின் வலீத் மட்டும் தனித்து அறிவிக்கிறார் என்ற குறையைத் தவிர வேறு குறை இல்லை என்று தெரிகிறது.
(பலமான ஒரு அறிவிப்பாளர் தனித்து அறிவிக்கும்போது மற்ற பலமானவர்கள், அல்லது இவரை விட மிக பலமானவர்கள் இவருக்கு மாற்றமாக அறிவிக்காவிட்டால் அதை ஏற்கலாம். விமர்சிக்கப்பட்டவர்கள் தனித்து அறிவிக்கும் போது அதை ஏற்பதற்கு அல்லது மறுப்பதற்கு தகுந்த ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த செய்தி பற்றிய முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என்பது ஹதீஸ்கலை அறிஞர்களிடம் உள்ள ஒரு விதியாகும்.
(1. ضوابط قبول التفرد في رواية الحديث دراسة مع أمثلة من تطبيقات النقاد)
(2 . تفرد الراوي الصدوق بين القبول والتوقف)
(ஆய்வுக்காக: لا يخرج الدجال حتى يذهل الناس عن ذكره)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
1 . அஹ்மத்-16667 ,
2 . அல்ஆஹாத் வல்மஸானீ-907 ,
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ الْحَوْطِيُّ، نا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، نا صَفْوَانُ، نا رَاشِدُ بْنُ سَعْدٍ، قَالَ: لَمَّا فُتِحَتْ إِصْطَخْرُ نَادَى مُنَادٍ: أَلَا إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ، قَالَ: فَرَجَعَ النَّاسُ، فَلَقِيَهُمُ الصَّعْبُ بْنُ جَثَّامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: لَوْلَا مَا تَذْكُرُونَ لَأَخْبَرْتُكُمْ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْرُجُ الدَّجَّالُ حَتَّى يَذْهَلَ النَّاسُ عَنْ ذِكْرِهِ، وَحَتَّى يَتْرُكَ الْأَئِمَّةُ ذِكْرَهُ عَلَى الْمَنَابِرِ»
3 . முஃஜமுஸ் ஸஹாபா-685 ,
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، نا عَمْرُو بْنُ عُثْمَانَ، نا بَقِيَّةُ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ قَالَ: لَمَّا فُتِحَتْ إِصْطَخْرُ قَالَ: قَالَ الصَّعْبُ بْنُ جَثَّامَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْرُجُ الدَّجَّالُ حَتَّى يَذْهَلَ النَّاسُ عَنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
4 . முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-992 ,
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ، ثَنَا أَبِي، حَ، وَحَدَّثَنَا أَبُو زُرْعَةَ، ثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَا: ثَنَا بَقِيَّةُ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، قَالَ: لَمَّا فُتِحَتِ اصْطَخْرُ نَادَى مُنَادٍ: أَلَا إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ , فَرَجَعَ النَّاسُ فَلَقِيَهُمُ الصَّعْبُ بْنُ جَثَّامَةَ , فَقَالَ: لَوْلَا مَا تَذْكُرُونَ لَأَخْبَرْتُكُمْ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْرُجُ الدَّجَّالُ حَتَّى يَذْهَلَ النَّاسُ عَنْ ذِكْرِهِ وَحَتَّى تَتْرُكَ الْأَئِمَّةُ ذِكْرَهُ عَلَى الْمَنَابِرِ»
சமீப விமர்சனங்கள்