எதிரிகளுடன் சண்டை நடைபெறும் காலமெல்லாம் ஹிஜ்ரத் செய்வது (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) முடிவடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், முஆவியா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) போன்றோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறியதாவது:
ஹிஜ்ரத் இருவகையாகும். 1. பாவங்களை விடுவது. 2. அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் தூதருக்காகவும் நாடு துறந்து செல்வது.
பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது. சூரியன் மேற்கில் உதயமாகும் போது ஒவ்வொரு மனிதரின் உள்ளமும் (ஏற்கனவே இருந்த நிலையில்) முத்திரையிடப்பட்டுவிடும். மக்கள் (புதிய) அமல்கள் செய்வதை விட்டு தடுக்கப்படுவர்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் குதாமா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 1671)حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ ضَمْضَمِ بْنِ زُرْعَةَ، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ، يَرُدُّهُ إِلَى مَالِكِ بْنِ يَخَامِرَ، عَنِ ابْنِ السَّعْدِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا دَامَ الْعَدُوُّ يُقَاتَلُ»
فَقَالَ مُعَاوِيَةُ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِنَّ الْهِجْرَةَ خَصْلَتَانِ: إِحْدَاهُمَا أَنْ تَهْجُرَ السَّيِّئَاتِ، وَالْأُخْرَى أَنْ تُهَاجِرَ إِلَى اللَّهِ وَرَسُولِهِ. وَلا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا تُقُبِّلَتِ التَّوْبَةُ، وَلا تَزَالُ التَّوْبَةُ مَقْبُولَةً حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنَ المَغْرِبِ، فَإِذَا طَلَعَتْ طُبِعَ عَلَى كُلِّ قَلْبٍ بِمَا فِيهِ، وَكُفِيَ النَّاسُ الْعَمَلَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1671.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1603,
1604.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19992-ளம்ளம் பின் ஸுர்ஆ அவர்கள் பற்றி, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
போன்றோர் இவர் பலமானவர் என்றும், அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/23) - அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் விமர்சனம் விளக்கமாக இல்லையென்பதால் இவரை பலமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும்.
மேலும் பார்க்க: நஸாயீ-4172 .
சமீப விமர்சனங்கள்