தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1723

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபுல் ஹவ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களின் பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் நினைவூகூரும் (முக்கிய) செய்திகள் என்ன?” என்று கேட்டேன்,

அதற்கவர்கள், (ஒரு தடவை) நான் தர்மப்பொருளாக வந்த பேரித்தம் பழத்தை எடுத்து என் வாயில் போட்டுவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்வாயில் விரலை விட்டு அதை) பிடுங்கி  எச்சிலோடு  தர்மப்பொருளின் பேரித்தம்பழங்களில் போட்டு விட்டார்கள் என்பதை நினைவு கூருகின்றேன்” என்று கூறினார்கள்.

அப்போது (அங்கிருந்தவர்களில்) ஒருவர் அந்தப்பேரித்தம்பழத்தை (இந்தச் சிறுவன்) சாப்பிடுவதால் உங்கள் மீது என்ன குற்றம் ஆகிவிடப்போகிறது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்)  அவர்கள் நாங்கள் தர்மப்பொருளை உண்ணக்கூடாது என்று பதிலளித்தார்கள். (இதை நினைவுகூருகின்றேன்)

மேலும் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்ற (உறுதியான விஷயத்)தின் பால் சென்று விடு. (ஏனெனில்) உண்மை, மனஅமைதி தரக்கூடியதாகவும், பொய், சந்தேகத்தை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள். (இதையும் நினைவுகூருகின்றேன்)

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) பிரார்த்தனையை எங்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். (இதையும் நினைவுகூருகின்றேன்)

அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த, வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத, வகினீ ஷர்ர மா களைத்த. இன்னஹு லா யதிள்ளு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த…

(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன்.)

(முஸ்னது அஹமது: 1723)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ

قُلْتُ لِلحَسَنِ بْنِ عَلِيٍّ: مَا تَذْكُرُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: أَذْكُرُ أَنِّي أَخَذْتُ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَأَلْقَيْتُهَا فِي فَمِي، فَانْتَزَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلُعَابِهَا، فَأَلْقَاهَا فِي التَّمْرِ. فَقَالَ لَهُ رَجُلٌ مَا عَلَيْكَ لَوْ أَكَلَ هَذِهِ التَّمْرَةَ؟ قَالَ: «إِنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ» قَالَ: وَكَانَ يَقُولُ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَإِنَّ الْكَذِبَ رِيبَةٌ» قَالَ: وَكَانَ يُعَلِّمُنَا هَذَا الدُّعَاءَ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ – وَرُبَّمَا قَالَ – تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-1631.
Musnad-Ahmad-Shamila-1723.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1655,1656,1657.




மேலும் பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.