உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“எனது சமுதாயத்தின் அழிவு வேதத்திலும், பாலிலும் உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! வேதமும் பாலும் என்றால் (இதற்கான விளக்கம்) என்ன?” என்று கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(வேதம் என்பது) அவர்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வார்கள்; ஆனால் அல்லாஹ் இறக்கிவைத்த (உண்மையான) கருத்துக்கு மாற்றமாக அதற்குத் தவறான விளக்கம் அளிப்பார்கள். (பால் என்பது) அவர்கள் பாலை (அதிகமாகப் பெறுவதை) விரும்புவார்கள்; (அதற்காகத் தங்கள் கால்நடைகளுடன் ஊருக்கு வெளியே சென்று தங்கிவிடுவார்கள்). அதனால் ஜமாஅத் தொழுகைகளையும், ஜுமுஆக்களையும் விட்டுவிடுவார்கள்; கிராமப்புறவாசிகளாக (நாடோடிகளாக) மாறிவிடுவார்கள்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 17415)حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي قَبِيلٍ، قَالَ: لَمْ أَسْمَعْ مِنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ إِلَّا هَذَا الْحَدِيثَ. قَالَ ابْنُ لَهِيعَةَ: وَحَدَّثَنِيهِ يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«هَلَاكُ أُمَّتِي فِي الْكِتَابِ وَاللَّبَنِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا الْكِتَابُ وَاللَّبَنُ؟ قَالَ: «يَتَعَلَّمُونَ الْقُرْآنَ فَيَتَأَوَّلُونَهُ عَلَى غَيْرِ مَا أَنْزَلَ اللَّهُ، وَيُحِبُّونَ اللَّبَنَ فَيَدَعُونَ الْجَمَاعَاتِ وَالْجُمَعَ وَيَبْدُونَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17415.
Musnad-Ahmad-Alamiah-16774.
Musnad-Ahmad-JawamiulKalim-17084.
இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
2 . அப்துல்லாஹ் பின் யஸீத்-அல்அதவீ-அல்முக்ரிஃ
3 . இப்னு லஹீஆ
4 . ..அபூகபீல்
5 . உக்பா பின் ஆமிர் (ரலி)
…
சமீப விமர்சனங்கள்