ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி அவர்கள் (மூத்தா) போரில் கொல்லப்பட்டு இறந்த செய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 1751)حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ:
لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ حِينَ قُتِلَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ أمْرٌ يَشْغَلُهُمْ – أَوْ أتَاهُمْ مَا يَشْغَلُهُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1751.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1687.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஜஃபர் பின் காலித் அவர்களின் தந்தையான காலித் பின் ஸாராவை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். இவரைப்பற்றி வேறு யாரும் விமர்சிக்கவில்லை…
பார்க்க : للراوي المجهول عند أهل الحديث مراتب .
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரைப்பற்றி ஸதூக் என்று கூறியுள்ளார்… - இந்த செய்தியை அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என்று கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-1751 , தயாலிஸீ-1026 , ரஸ்ஸாக்-6665 , ராஹவைஹி-2144 , இப்னு மாஜா-1610 , திர்மிதீ-998 , அபூதாவூத்-3132 , பஸ்ஸார்-2245 , அபீயஃலா-6801 , அல்முஃஜமுல் கபீர்-204 , 1472 , தாரகுத்னீ-1850 , ஹாகிம்-1377 , குப்ரா பைஹகீ-7096 , 7097 ,
2 . அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1611 .
சமீப விமர்சனங்கள்