தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17576

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

துகைன் பின் ஸயீத் அல்கஸ்அமீ (ரலி) அவர்களின் ஹதீஸ்.

 துகைன் (ரலி) கூறியதாவது:

நாங்கள் நானூற்று நாற்பது பேர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவு கேட்டு வந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எழுந்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கோடை காலத்திற்குப் போதுமான அளவு தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் வகீஉ கூறுகிறார்: அரபியரின் வழக்கில், கோடை காலம் என்பது நான்கு மாதங்கள் ஆகும்.)

நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “எழுந்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! செவியேற்றோம், கட்டுப்பட்டோம்” என்று கூறிவிட்டு, எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். அவர்கள் எங்களை அவர்களுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்கள். தம் இடுப்பில் இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்தார்கள்.

துகைன் (ரலி) கூறுகிறார்:

அந்த அறையில், படுத்திருக்கும் ஒட்டகக் குட்டியைப் போன்ற பேரீச்சம் பழக் குவியல் இருந்தது. உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய அளவு எடுத்துக்கொண்டோம். நான் அவர்களில் கடைசியாக இருந்தேன். பின்னர் நான் திரும்பிப் பார்த்தேன். (நாங்கள் அவ்வளவு எடுத்திருந்தும்) அதிலிருந்து ஒரு பழம்கூட குறையாததுபோல இருந்தது.

(முஸ்னது அஹ்மத்: 17576)

حَدِيثُ دُكَيْنِ بْنِ سَعِيدٍ الْخَثْعَمِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ دُكَيْنِ بْنِ سَعِيدٍ الْخَثْعَمِيِّ، قَالَ:

أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ أَرْبَعُونَ وَأَرْبَعُ مِائَةٍ، نَسْأَلُهُ الطَّعَامَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «قُمْ فَأَعْطِهِمْ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا عِنْدِي إِلَّا مَا يَقِيظُنِي وَالصِّبْيَةَ؟ – قَالَ وَكِيعٌ: الْقَيْظُ فِي كَلَامِ الْعَرَبِ: أَرْبَعَةُ أَشْهُرٍ – قَالَ: «قُمْ فَأَعْطِهِمْ» قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، سَمْعًا وَطَاعَةً. قَالَ: فَقَامَ عُمَرُ وَقُمْنَا مَعَهُ، فَصَعِدَ بِنَا إِلَى غُرْفَةٍ لَهُ، فَأَخْرَجَ الْمِفْتَاحَ مِنْ حُجْزَتِهِ، فَفَتَحَ الْبَابَ. قَالَ دُكَيْنٌ: فَإِذَا فِي الْغُرْفَةِ مِنَ التَّمْرِ شَبِيهٌ بِالْفَصِيلِ الرَّابِضِ، قَالَ: شَأْنَكُمْ. قَالَ: فَأَخَذَ كُلُّ رَجُلٍ مِنَّا حَاجَتَهُ مَا شَاءَ، قَالَ: ثُمَّ الْتَفَتُّ وَإِنِّي لَمِنْ آخِرِهِمْ وَكَأَنَّا لَمْ نَرْزَأْ مِنْهُ تَمْرَةً


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17576.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.