தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19148

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் (தொழுகையின்) வரிசையில் நின்றிருந்தபோது தூரத்திலிருந்து வந்த ஒரு மனிதர் வரிசையில் சேர்ந்து “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

அப்போது முஸ்லிம்கள் தலையை உயர்த்தி அவரை கண்டித்தனர். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்துவது யார்? என்றும் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்த பின், திரும்பி “யார் இப்படி உரத்த சத்தமிட்டது? என்று கேட்டார்கள். இன்ன மனிதர் என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது, (அவரைப் பார்த்து) “அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னுடைய வார்த்தை மேல்நோக்கி சென்றது. அதற்காக ஒரு கதவு திறக்கப்பட அதில் நுழைந்துக்கொண்டதை நான் பார்த்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 19148)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادٍ، حَدَّثَنَا إِيَادٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ:

جَاءَ رَجُلٌ نَابِي، يَعْنِي نَائِي، وَنَحْنُ فِي الصَّفِّ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ فِي الصَّفِّ ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، فَرَفَعَ الْمُسْلِمُونَ رُءُوسَهُمْ وَاسْتَنْكَرُوا الرَّجُلَ فَقَالُوا: مَنِ الَّذِي يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ هَذَا الْعَالِي الصَّوْتَ؟» قَالَ: هُوَ ذَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ كَلَامَكَ يَصْعَدُ فِي السَّمَاءِ حَتَّى فُتِحَ بَابٌ مِنْهَا، فَدَخَلَ فِيهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19148.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18736.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்லாஹ் பின் ஸயீத் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    (மட்டுமே) பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்; புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    போன்றோர் எதுவும் கூறவில்லை என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: தஃஜீலுல் மன்ஃபஆ-547)

  • இதில் அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் அப்துல்லாஹ் பின் ஸயீத் என்றே இடம்பெற்றுள்ளது. என்றாலும் இந்த அறிவிப்பாளர்தொடரில்-ஜவாமிஉல் கலிம் என்ற சாப்ட்வேரில் அப்துல்லாஹ் பின் ஸயீத் பின் யுஹ்மத்-அப்துல்லாஹ் பின் அபுஸ்ஸஃபர் என்று இடம்பெற்றுள்ளது. இது தவறாகும். காரணம் இவரின் ஆசரியர்களும், மாணவர்களும் வேறு அறிவிப்பாளர்களாக உள்ளனர். ஸயீத் பின் யுஹ்மத் என்பது ஒருவரின் பெயர். அப்துல்லாஹ் பின் அபுஸ்ஸஃபர் என்பது அவரின் பிரபல்யமான பெயர். எனவே அப்துல்லாஹ் பின் ஸயீத் என்பது வேறுஒருவரைத் தான் குறிக்கிறது. அவர் அறியப்படாதவர் ஆவார்.

மேலும் பார்க்க: அஹ்மத்-19134 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.