தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19331

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் கபீஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)

ஸயீத் பின் அபூஅரூபாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்வஹ்ஹாப் அவர்கள், “மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்று அறிவித்துள்ளார்.

(முஸ்னது அஹ்மத்: 19331)

حَدَّثَنَا أَسْبَاطٌ، حَدَّثَنَا سَعِيدٌ، وَعَبْدُ الْوَهَّابِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَدْخُلَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخَبِيثِ وَالْخَبَائِثِ “

قَالَ عَبْدُ الْوَهَّابِ: «الْخُبُثُ وَالْخَبَائِثُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19331.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34069-காஸிம் பின் அவ்ஃப் என்பவர் பற்றி சிலர் நம்பகமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/416)

மேலும் பார்க்க: இப்னு மாஜா-296 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.