தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19718

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தனது பிரியமானவளுக்கு நெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவளுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவளுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவளுக்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.

அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) அல்லது அபூமூஸா (ரலி).

(முஸ்னது அஹ்மத்: 19718)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ قَالَ: حَدَّثَنِي أَسِيدُ بْنُ أَبِي أَسِيدٍ، عَنْ ابْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ ابْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ سَرَّهُ أَنْ يُحَلِّقَ حَبِيبَتَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهَا حَلْقَةً مِنْ ذَهَبٍ، وَمَنْ سَرَّهُ أَنْ يُسَوِّرَ حَبِيبَتَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهَا سِوَارًا مِنْ ذَهَبٍ، وَلَكِنِ الْفِضَّةُ فَالْعَبُوا بِهَا لَعِبًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19718.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19278.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்த செய்தியில் தனது பிரியமானவளுக்கு என பெண்பாலாக வந்துள்ளது. ஆனால் தனது பிரியமானவனுக்கு என்று ஆண்பாலாக வந்துள்ள செய்தியே சரியானது. 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.