அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்களும் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.
அறிவிப்பவர் : ஸமுரா (ரலி)
…
(முஸ்னது அஹ்மத்: 20235)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، وَرَوْحٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
عَلَيْكُمْ بِهَذَا الْبَيَاضِ، فَيَلْبَسُهُ أَحْيَاؤكُمْ، وَقَالَ رَوْحٌ: فَلْيَلْبَسْهُ أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهِ مَوْتَاكُمْ، فَإِنَّهُ مِنْ خَيْرِ ثِيَابِكُمْ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20235.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19776.
- இதில் இரண்டு அறிவிப்பாளர்தொடர் உள்ளது.
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா —> நபி (ஸல்).
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> ரவ்ஹ் பின் உபாதா —> ஸயீத் பின் அபூஅரூபா பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
—> அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா —> நபி (ஸல்).
இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் மஃமர் வழியாக வரும் செய்தி பற்றி, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், மஃமர் மட்டுமே அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கிறார். மற்றவர்கள் அபூகிலாபா —> ஸமுரா என்று இடையில் அபுல்முஹல்லபை கூறாமல் அறிவிக்கின்றனர் என்பதால் இது முன்கதிஃ என்ற கருத்தில் கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1093)
- என்றாலும் மஃமர் அவர்களைப் போன்று ஸயீத் பின் அபூஅரூபா பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
அவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும். இந்த அறிவிப்பாளர்தொடர் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதாலோ, அல்லது அவருக்கு கிடைத்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்திருந்தாலோ அப்படி கூறியிருப்பார்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .
சமீப விமர்சனங்கள்