தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20235

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

20235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்களும் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.

அறிவிப்பவர் : (ரலி)

…

ஸமுரா (ரலி)

سمرة بن جندب

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா அல்லது கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸமுரா பின் ஜுன்துப்

தந்தை பெயர்: ஜுன்துப் பின் ஹிலால் பின் ஹுரைஜ்

வம்சம்: ஃபஸாரா, அன்ஸாரிகளின் கூட்டாளி

புனைப்பெயர்: அபூ ஸயீத், அபூ அப்துல்லாஹ், அபூ அப்துர்ரஹ்மான், அபூ முஹம்மத், அபூ ஸுலைமான்

பயணித்த ஊர்கள்: மதீனா, பஸரா, கூஃபா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா அல்லது கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) ஒரு நபித்தோழர் ஆவார். இவர் மதீனாவில் பிறந்தார். பஸரா மற்றும் கூஃபா நகரங்களில் வசித்தார்.

ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு பஸரா அல்லது கூஃபாவில் மரணமடைந்தார். இவர் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவராகவும், உண்மையே பேசுபவராகவும் இருந்தார். இப்னு ஸீரீன் மற்றும் அல்ஹஸன் அல்பஸரீ போன்றோர் இவரைப் புகழ்ந்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஃகா பின் அல்அஸ்லஃ, தஃலபா பின் அப்பாத், அல்ஹஸன் அல்பஸரீ, ஹுஸைன் பின் அபில் ஹர் அல்அன்பரீ, அர்ரபீஉ பின் அம்லா அல்ஃபஸாரீ, ஸைத் பின் உக்பா அல்ஃபஸாரீ, ஸஃத் பின் ஸமுரா பின் ஜுன்துப், ஸுலைமான் பின் ஸமுரா பின் ஜுன்துப், ஸம்ஆன் பின் முஷன்னிஜ், ஸுவாதா பின் ஹன்ழலா அல்குஷைரீ, ஆமிர் அஷ்ஷஅபீ, அப்துல்லாஹ் பின் புரைதா

வேறு பெயர்கள்: ஸமுரா பின் ஜுன்துப்


ஆதாரம்: muslimscholars.info (394) · Should verify


حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، وَرَوْحٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

عَلَيْكُمْ بِهَذَا الْبَيَاضِ، فَيَلْبَسُهُ أَحْيَاؤكُمْ، وَقَالَ رَوْحٌ: فَلْيَلْبَسْهُ أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهِ مَوْتَاكُمْ، فَإِنَّهُ مِنْ خَيْرِ ثِيَابِكُمْ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20235.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19776.



  • இதில் இரண்டு அறிவிப்பாளர்தொடர் உள்ளது.

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா —> நபி (ஸல்).

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> ரவ்ஹ் பின் உபாதா —> ஸயீத் பின் அபூஅரூபா பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
—> அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா —> நபி (ஸல்).

இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் மஃமர் வழியாக வரும் செய்தி பற்றி, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், மஃமர் மட்டுமே அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கிறார். மற்றவர்கள் அபூகிலாபா —> ஸமுரா என்று இடையில் அபுல்முஹல்லபை கூறாமல் அறிவிக்கின்றனர் என்பதால் இது முன்கதிஃ என்ற கருத்தில் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1093)

  • என்றாலும் மஃமர் அவர்களைப் போன்று ஸயீத் பின் அபூஅரூபா பிறப்பு ஹிஜ்ரி 69
    இறப்பு ஹிஜ்ரி 156
    வயது: 87
    அவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும். இந்த அறிவிப்பாளர்தொடர் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதாலோ, அல்லது அவருக்கு கிடைத்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்திருந்தாலோ அப்படி கூறியிருப்பார்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.