நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர் ஜனாஸாவின் கட்டிலை எதிர் நோக்கி பின்புறம் நடந்தவர்களாக ‘வாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்’ என்று கூறினர்.
(அப்போதும் அவர்கள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்). மிர்பத் எனும் இடத்தை நாங்கள் அடைந்த போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் கோவேறுக் கழுதையில் வந்து எங்களுடன் சேர்ந்தார். மக்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள்.
‘அபுல் காஸிம் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து சென்றதை பார்த்திருக்கின்றோம்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 20400)حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَبِي، قَالَ:
خَرَجْتُ فِي جَنَازَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ: فَجَعَلَ رِجَالٌ مِنْ أَهْلِهِ يَسْتَقْبِلُونَ الْجِنَازَةَ فَيَمْشُونَ عَلَى أَعْقَابِهِمْ، وَيَقُولُونَ: رُوَيْدًا بَارَكَ اللَّهُ فِيكُمْ، قَالَ: فَلَحِقَنَا أَبُو بَكَرَةَ مِنْ طَرِيقِ المِرْبَدِ، فَلَمَّا رَأَى أُولَئِكَ، وَمَا يَصْنَعُونَ حَمَلَ عَلَيْهِمْ بِبَغْلَتِهِ، وَأَهْوَى لَهُمْ بِالسَّوْطِ، وَقَالَ: «خَلُّوا، فَوَالَّذِي كَرَّمَ وَجْهَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّا لَنَكَادُ أَنْ نَرْمُلَ بِهَا» ،
وَقَالَ يَحْيَى مَرَّةً: لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20400.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19918.
சமீப விமர்சனங்கள்