தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20640

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சல்மான், ஸுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை எற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்தபோது, அக்குழுவினர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே!” என்று கூறினர்.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், “குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள்!” என்று (கடிந்து) கூறினார்கள்.

இந்த சம்பவம் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் “அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக் கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்திவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.

ஆகவே, அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோப்படுத்திவிட்டேனா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, அபூபக்ர் அவர்களே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 20640)

حَدَّثَنَا مُهَنَّأُ بْنُ عَبْدِ الْحَمِيدِ أَبُو شِبْلٍ، وَحَسَنٌ يَعْنِي ابْنَ مُوسَى، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، الْمَعْنَى، عَنْ ثَابِتٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو،

أَنَّ سَلْمَانَ، وَصُهَيْبًا، وبِلَالًا كَانُوا قُعُودًا فِي أُنَاسٍ، فَمَرَّ بِهِمْ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، فَقَالُوا: مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا بَعْدُ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهَا؟ قَالَ: فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” يَا أَبَا بَكْرٍ، لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ، فَلَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ، لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ فَرَجَعَ إِلَيْهِمْ، فَقَالَ: أَيْ إِخْوَتَنَا لَعَلَّكُمْ غَضِبْتُمْ، فَقَالُوا: لَا يَا أَبَا بَكْرٍ، يَغْفِرُ اللَّهُ لَكَ،


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20640.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20138.




மேலும் பார்க்க: முஸ்லிம்-4916 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.