தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21310

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

21310. யார் தனது உள்ளத்தை ஈமானுக்காகத் தூய்மையாக்கி, மேலும் தன் உள்ளத்தை தவறுகளிலிருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மன நிறைவு பெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக் கூடியதாகவும் தனது சரீரத்தை சீரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்ணை (நல்லவற்றை) காணக் கூடியதாகவும் ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார். யார் தனது உள்ளத்தை (நல்லவற்றை) ஏற்றுக் கொள்ளக் கூடியதாக ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூதர் (ரலி)

أبو ذر الغفاري

இறப்பு: ஹிஜ்ரி 32, அர்ரபதா (மதீனாவுக்கு அருகில்)

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஜுன்துப் பின் ஜுனாதா

தந்தை பெயர்: ஜுனாதா பின் ஸகன்

வம்சம்: கஃப்பார்

புனைப்பெயர்: அபூதர்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணித்த ஊர்கள்: ஹிஜாஸ், மதீனா, ஷாம், அர்ரபதா

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 32, அர்ரபதா (மதீனாவுக்கு அருகில்)

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூதர் ரலி அவர்கள் ஆரம்பகால இஸ்லாமியர்களில் ஒருவர். நபி (ஸல்) அவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்" என்று இஸ்லாமிய வாழ்த்து கூறிய முதல் நபர் இவரே. இவருடைய இயற்பெயர் ஜுன்துப் பின் ஜுனாதா அல்லது புரைர் பின் ஜுனாதா என்று பலவாறாகக் கூறப்படுகிறது.

இவர் துறவறம், உண்மை, அறிவு மற்றும் அல்லாஹ்வுக்காக எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுவதில் தலைசிறந்தவராக இருந்தார். ஹிஜ்ரி 32 இல் மதீனாவுக்கு அருகிலுள்ள அர்ரபதா என்ற இடத்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), முஆவியா பின் அபூஸுஃப்யான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அனஸ் பின் மாலிக், இப்னு அப்பாஸ், ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ, கர்ஷா பின் அல்ஹுர் அல்ஃபஸாரீ, ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹள்ரமீ, அல்அஹ்னஃப் பின் கைஸ், அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித், அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ, அப்துர்ரஹ்மான் பின் ஃக்னம், கைஸ் பின் அப்பாத் அல்கைஸீ, அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ, அபூ உஸ்மான் அந்நஹ்தீ

வேறு பெயர்கள்: அபூ தர், ஜுன்துப் பின் ஜுனாதா, புரைர் பின் ஜுனாதா


ஆதாரம்: muslimscholars.info (23) · Should verify


حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْعَبَّاسِ، حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: وَأَخْبَرَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«قَدْ أَفْلَحَ مَنْ أَخْلَصَ قَلْبَهُ لِلْإِيمَانِ، وَجَعَلَ قَلْبَهُ سَلِيمًا، وَلِسَانَهُ صَادِقًا، وَنَفْسَهُ مُطْمَئِنَّةً، وَخَلِيقَتَهُ مُسْتَقِيمَةً، وَجَعَلَ أُذُنَهُ مُسْتَمِعَةً، وَعَيْنَهُ نَاظِرَةً، فَأَمَّا الْأُذُنُ فَقَمِعٌ، وَالْعَيْنُ مُقِرَّةٌ بِمَا يُوعَى الْقَلْبُ، وَقَدْ أَفْلَحَ مَنْ جَعَلَ قَلْبَهُ وَاعِيًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20348.
Musnad-Ahmad-Shamila-21310.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20793.



إسناد ضعيف لأن به موضع انقطاع بين خالد بن معدان الكلاعي وأبو ذر الغفاري ، وباقي رجاله ثقات عدا بقية بن الوليد الكلاعي وهو صدوق كثير التدليس عن الضعفاء

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14660-காலித் பின் மஃதான் அவர்களுக்கும், அபூதர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார். ராவீ-9319-பக்கிய்யது பின் வலீத் பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/174)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.