முத்தலிப் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களிடம் வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்களுக்கு , ஸைத் (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார். முஆவியா (ரலி), (தன்னருகில் உள்ள) ஒருவரிடம் அந்த ஹதீஸை எழுதச் சொல்ல அவர் எழுதினார். உடனே ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் கூறும் செய்திகளை எழுதவேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள் என்று கூறினார். எனவே (எழுதப்பட்ட) அந்த ஹதீஸை அவர் அழித்துவிட்டார்.
(முஸ்னது அஹ்மத்: 21579)حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنْ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:
دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ عَلَى مُعَاوِيَةَ، فَحَدَّثَهُ حَدِيثًا، فَأَمَرَ إِنْسَانًا أَنْ يَكْتُبَ، فَقَالَ زَيْدٌ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَكْتُبَ شَيْئًا مِنْ حَدِيثِهِ، فَمَحَاهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21579.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21044.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44647-முத்தலிப் பின் அப்துல்லாஹ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1027)
மேலும் பார்க்க: அபூதாவூத்-3647 .
சமீப விமர்சனங்கள்