தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21926

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…அலீ (ரலி) அவர்கள் ஒருவரை விருந்துக்கு அழைத்து அவருக்காக உணவைத் தயார்செய்துவைத்திருந்தார்கள். (அப்போது) ஃபாத்திமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நாம் விருந்துக்கு அழைத்தால் (நன்றாக இருக்கும்) என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கதவின் ஓரத்திலே தமது கையை வைத்த போது வீட்டின் ஓரத்திலே ( உருவத்தாலான) திரைச்சீலையை கண்டார்கள். உடனே திரும்பிசென்றுவிட்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரை சந்தித்து, தாங்கள் ஏன் திரும்பிச் செல்கின்றீர்கள்? என்று கேட்குமாறு கூறினார்கள், அவ்வாறு கேட்டதற்கு, ”அலங்கரிக்கப்பட்ட வீட்டிலே நுழைவற்கான எந்த தேவையும் எனக்கு இல்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபீனா-அபூஅப்துர்ரஹ்மான் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 21926)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُمْهَانَ، حَدَّثَنَا سَفِينَةُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ:

أَنَّ رَجُلًا أَضَافَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَتْ فَاطِمَةُ: لَوْ دَعَوْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ أَبِي كَامِلٍ، فَدَعَوْهُ فَجَاءَ، فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَيِ الْبَابِ، فَرَأَى قِرَامًا فِي نَاحِيَةِ الْبَيْتِ، فَرَجَعَ، فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ: الْحَقْهُ فَقُلْ لَهُ: مَا رَجَعَكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «إِنَّهُ لَيْسَ لِي أَنْ أَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20916.
Musnad-Ahmad-Shamila-21926.
Musnad-Ahmad-Alamiah-20916.
Musnad-Ahmad-JawamiulKalim-21365.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.