அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜெரூசலம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.
(பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கையைால், யாரிடம் இந்த செய்தியை கூறினார்களோ அவரை (அதாவது முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய என்னுடைய) தோளில் அடித்துவிட்டு முஆதே! நீ இங்கே அமர்ந்திருப்பது எப்படி உண்மையோ அது போன்று மேற்கண்டவை நிகழ்வது உண்மையாகும் என்று கூறினார்கள்)
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில்- தொடையிலோ அல்லது தோளிலோ அடித்துவிட்டு என்று சந்தேகமாக அறிவிக்கிறார்.
(முஸ்னது அஹ்மத்: 22121)حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يَخَامِرَ، عَنْ مُعَاذٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ» . ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى فَخِذِ الَّذِي حَدَّثَهُ أَوْ مَنْكِبِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا لَحَقٌّ كَمَا أَنَّكَ هَاهُنَا» . أَوْ كَمَا «أَنَّكَ قَاعِدٌ» يَعْنِي: مُعَاذًا
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22121.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21548.
சமீப விமர்சனங்கள்